இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விரியும் அறிவியல் உலகம் ii.5 பெற்று விட்டன; சில வெற்றியடையும் நிலையில் உள்ளன; மேலும் சில வருங்கால் அறிவியலறிஞர்களின் புது முயற்சி களுக்கு அடிப் படைகளாக அமைந்து வருகின்றன. இவ் வாறு விரியும் அறிவியல் உலகில் துருவி ஆராய்வதற்குப் பல்வேறு வழிகள் அமைந்து கிடக்கின்றன; அமைந்தும் வருகின்றன். அவை வருங்கால அறிவியலறிஞர்களை எங்கு அழைத்துச் செல்லும் என்று இப்பொழுது நாம் திட்டமாக் ஒன்றையும் சொல்ல முடியாது. இந்தப் புதிய வழிகளில்'துருவி ஆராயப் போகின்றவர் யார் என்பதையும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அங்ஙனம் ஆராயப் போகின்றவர். இதனைப் படிக்கும் நீங்களாகவே இருக்கலா மல்லவா? அப்ப்டி இல்லை என்று யார் சொல்லமுடியும்?