பக்கம்:அதிசய மின்னணு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசய மின்னணு அணுத்திரளைகள் அணுக்களாலானவை என்பதை நீண்ட காலத்திற்கு முன்னரே அறிவியலறிஞர்கள் (scientists) அறிந்திருந்தனர். உலகில் அணுதான் மிகமிகச் சிறிய பொருள் என்று அவர்கள் கருதினர். ஆகவே, அவர்கள் அதன் அமைப்பினைக் காண விழைந்தனர். அணு மின்சாரத் தன்மையுடையது என்பதையும் அவர்கள் அறிந்தனர். மின்னுற்றல் மிகச் சக்தி வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். எனவே, அவர்கள் அணுவினைத் தம் முடைய நலனுக்குப் பயன் படுத்தும் வழியைக் கண்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் உழைத்தனர். அவர்கள் பல்வேறு சிக்கலான பொறிகளைப் புனைந்து அணுவினை ஆராய்ந்தனர். இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் அணு வென்பது பல மின்துகள்களாலானது என்றும், இந்த மின்துகள்கள் உட்கருவினைச் சுற்றிக்கொண்டே யிருக் கின்றன என்றும் மெய்ப்பித்தனர். இந்த மின்துகள்களையே அவர்கள் மின்னணுக்கள் (electrons) என்று வழங்கினர். மின்னணு என்பது ஒரு புதிய சொல்லன்று. மின்னல் ஏற்படும் பொழுதெல்லாம் உண்டாகும் மின்பொறிகளைக் கூறும்பொழுது இச்சொல்லை மக்கள் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தியே வந்தனர். இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் கண்ணுக்குப் புலனுகாத சதா இயக்க நிலை யிலுள்ள மின்னணுக்களாலானதென்று அவர்கள் கண் டறிந்ததும், அவர்கள் இந்த மின்னணுக்களைக் கட்டுப் படுத்தித் தமக்குச் சேவகம் செய்யுமாறு ஏவத் தொடங்கினர். இவ்வாறு மின்னணுக்களைச் செயற்படச் செய்யும் துறை இன்று மின்னணுவியல் (electronics) என்று வழங்கப்பெறு கின்றது. இந்தப் புத்தகம் முழுவதிலும் கூறப்பெற்றுள்ள செய்திகள் யாவும் இந்த இயலச் சார்ந்தவையே.