பக்கம்:அதிசய மின்னணு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அதிசய மின்னணு அலை நீளத்தைக்கொண்ட கதிர்களை வெளி விடுகின்றது; இக்கதிர்கள்தாம் நாம்பெறும் ஒளியாகும். G வெவ்வேறு பாஸ்வரப்பிரகாசிகள் வெவ்வேறு நிற முள்ள ஒளியைத் தருகின்றன. இக் காரணத்தால்தான் சில ஒளிரும் ஒளிகள் நீலநிறமாகவும் சில வெண்மையாகவும் இருக்கின் றன. ஒளிரும் விளக்குகள் ஒளியினைத் தருவ தற்குப் பாஸ்வரப்பிரகாசிகளைப் பயன் படுத்துவதால், அவற்றிற்குச் சாதாரண விளக்குகளை விடக் குறைந்த மின் ளுேட்டமே தேவைப்படுகின்றது; ஆகையால் இவ் வகை விளக்குகளை எரிப்பது மலிவு. - உருவநேர்படி ஒளிபரப்பு: ஒருநாள் காலையில் நாம் சிற். றுண்டி அருந்திய பிறகு வானெலி நிகழ்ச்சிகளில் ஈடு பட்டிருக்கின்ருேம். பையன் செய்தித்தாள் கொண்டுவருகின் ருன்; பத்திரிகையின் தலைப்பக்கத்தில் நேருவும் கென்னடி யும் முதல்நாள் பேசிக்கொண்டிருந்த நிலையைக் காட்டும் ஒளிப்படம் காணப்படுகின்றது. இவ்வளவு விரைவாக இப் படம் எப்படிச் செய்தி அலுவலகத்திற்குக் கிடைத்தது? இது மின்னணுவியலின் கிளர்ச்சி யூட்டும் அருஞ்செயல் களில் ஒன்று. அஃது ஒருவகைத் தொலைக்காட்சி (television); வெட்டவெளியில் பார்க்கவல்ல ஒரு விசித்திர வித்தை. அப். படம் கடல்களையும் கண்டங்களையும் காற்றையும் கடந்து வந்த ஓர் அற்புத நிகழ்ச்சி, அஃது அனுப்பப்பெறும் opsopsoul e-gai Giuli. 9;sujūd (facsimile broadcasting) என்று வழங்குவர். - உருவநேர்படி என்பது ஒர் உருவத்தின் சரியான நகல் . அது கிட்டத்தட்ட ஒலிப்பதிவு செய்வது போலப் பதிவு செய்யப்பட்ட நகலாகும்; இங்கு நகல் செய்யும் ஊசி எஃகி குல் செய்யப் பெற்றதன்று; இந்த ஊசி ஓர் ஒளிக்கற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/62&oldid=735152" இலிருந்து மீள்விக்கப்பட்டது