பக்கம்:அநுக்கிரகா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அநுக்கிரகா

"முன்னாலே உட்கார்ந்து கடைசி வரை கேட்கணும் பேசற பேச்சாளருங்க எல்லாம் முன்னிலை வகிக்கிறவரு பேரைச் சொல்லி ரெண்டு வார்த்தை புகழுவாங்க, கூட்டச் செலவை ஏத்துக்கணும்.

"கூட்டத்துக்குத் தலைவருங்கறவர்தானே முன்னிலைங்கறது?

"இல்லீங்க. தலைவர் வேறே, முன்னிலை வகிக்கிறவர் வேறே. பல பேருக்கு வாய்ப்பளிக்க அப்பப்போ இப்படிப் புதுப் புதுப் பேருங்களைக் கண்டுபிடிச்சுப் போடுவோம்."

'அப்போது கூட்டத்தின் பிற்பகுதியில் இறுதிவரை பொறுமையாக உட்கார்ந்து கேட்கிற மாதிரி யாரையாவது ஒருத்தரைப் பின்னிலைன்னும் போடலாமேப்பா?"

"முன்னிலைக்காரர்தான் கடைசிவரை இருந்து கேட்கணுங்க."

"தண்டனைன்னு சொல்லு."

"அப்பிடி நினைக்க மாட்டாங்க, கடைசிப் பேச்சாளர், நன்றி சொல்லுகிறவர்வரை அத்தனை பேரும் தன் பேரைச் சொல்லிப் புகழுவாங்கங்கிற குஷியிலே முன்னிலைப் பிரமுகர் ராத்திரி பன்னிரண்டு ஒரு மணிவரை பொறுமையா கூட உட்கார்ந்திருப்பாங்க! கூட்டச் செலவையும் , ஒப்புத்துப்பாங்க."

"பன்னண்டு மணி, ஒரு மணியா? இதென்னப்பா சுத்த ஸெகண்ட் ஷோ, அரசியலா இருக்கு?"

"ஸெகண்ட் ஷோ மட்டுமில்லே! எலெக்ஷன் டயம்னா மூணு மணி நாலு மணிகூட. ஆகுமுங்க, வௌக்கு வைக்கிறப்பத் தொடங்கின கூட்டம் முடியிறப்பக் கோழி கூவிடும். "

ஐயையோ பயங்கரம்! அலறியே விட்டாள், ஆநுக்கிரகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/24&oldid=1256072" இலிருந்து மீள்விக்கப்பட்டது