பக்கம்:அநுக்கிரகா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அநுக்கிரகா

வனைவிட ஏ.சி. காரில் வந்து இறங்குகிறவனை அதிக மதிப்போடு அண்ணாந்து பார்த்தார்கள், அதுதான் பிரத்யட்சமாகவும், நிதரிசனமாகவும் இருந்தது. ஆனால் பொன்னுரங்கம் மட்டும் கனிவண்ணனையும் மாம்பழக் கண்ணனையும் நினைத்துப் பயந்து நடுங்கினான். அவர்கள் தன்னை ஆவாரம்பட்டுப் பண மூட்டையின் அடிவருடி என்று கூறி விடுவார்களோ என்பதாகப் பயந்து செத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடக்கிற இடத்துக்கு முன்கூட்டியே போய் அநுக்கிரகாவுக்கு வாழ்த்தொலி, கைதட்டல், விசில் முழக்கம் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்தான் பொன்னுரங்கம், 'அண்ணி அநுக்கிரகா!' என்று ஒருவன் குரல் எழுப்பவும், வாழ்க! வாழ்க!' என்று பலகுரல் ஒலிகள் தொடர்ந்து ஓய்ந்தன, அவள் கூட்டத்தை நோக்கிக் கைகூப்பி முகமலர்ந்து வணக்கம் சொன்னாள். மேடையைச் சுற்றியிருந்தவர்களின் பலவிதமான குரல்களை அங்கிருந்து அவளே கேட்க முடிந்தது.

'பாருய்யா! லண்டன்லே படிச்ச பொண்ணு, நம்ப தலைவரு மேலே பிரியப்பட்டுப் புச்சா. வந்து கட்சியிலே சேர்ந்திருக்கு."

“சும்மா சினிமா ஷ்டாருங்க கணக்கா அப்பிடியே ஜொலிக்குதுப்பா.

"அத்தினி மேல் நாடெல்லாம் போயிப் பெரிய படிப்புப் படிச்சிருந்தும் என்ன பணிவு, என்ன பண்பு பாருப்பா! மேடையேறினதும் சனத்தை மதிச்சுக் கும்புடறாங்க, பாரு.

இந்தப் பொண்ணு முகத்திலே நல்ல களை. சிரிச் சாலே போதும், பேச்சு வேற எதுக்குங்கிறேன். இவை யெல்லாம் காதில் விழுந்து அநுக்கிரகாவைப் பெருமிதமாக உணர வைத்தன.

நிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள். திடீரென்று மூக்குச் சளி ஒழுகிச் சலைவாய் வடியும் ஒரு குழந்தையை யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/38&oldid=1256269" இலிருந்து மீள்விக்கப்பட்டது