பக்கம்:அநுக்கிரகா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

53

"சம்பந்தம் இருக்குதுங்க. அந்தக் கனிவண்ணன் கோஷ்டி நம்ப கூட்டத்திலே கலாட்டா எதுவும் பண்ணாமே நாமே ஒரு நூறு ரௌடிங்களுக்கு சாராயத்தை ஊத்திக் கூட்டத்திலே நடு நடுவே நிறுத்தி வைக்கணுமுங்க."

"நிறுத்தி வச்சா?"

"கனிவண்ணன் கோஷ்டி ரௌடிங்களை இவங்க கவனிச்சுப்பாங்க. திமிறிப் போய் அவங்க ஏதாச்சும் ஏடா கூடமாப் பண்ணினாங்கன்னா நம்ம ஆளுங்க ஓசை படாமல் அவங்க எலும்பை நொறுக்கிடுவாங்க."

"அத்தினி ரிஸ்க் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே ஏம்பா கூட்டம் போடறே? வேற எங்கியாச்சும் போடேன்."

"அத்தனையும் வோட்டுங்க. கனிவண்ணனோட கோட்டைன்னு பேர் வாங்கின ஏரியா அது, எப்படியும் நம்ம தொகுதியிலே இருக்கே? அந்த ஓட்டையெல்லாம் விட்டுடலாமா? எலக்சனை மைண்டுலே வச்சுட்டுத் தானே நான் ஏரியாவாரியாகப் பிரிச்சுக் கூட்டங்களை செட்அப் பண்ணிக்கிட்டு வாரேன், அதைப் புரிஞ்சுக்கலீங்களே நீங்க?"

முத்தையா மறு பேச்சுப் பேசாமல் இரும்புப் பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிக்கொண்டு வந்து பொன்னுரங்கத்திடம் நீட்டினார். சுளைசுளையாக நூறு ரூபாய் நோட்டுகள் கைமாறின. "வரவர அரசியல் பண்றது ரொம்பக் காஸ்ட்லியாப் போச்சுப்பா."

"கவலைப்படாதீங்க. விடறதை எல்லாம் வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுத்துடலாம்."

உடனே முத்தையா அவனைச் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, 'இதோ பாரு பொன்னுரங்கம், இன்னொரு

அநு.—4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/55&oldid=1256769" இலிருந்து மீள்விக்கப்பட்டது