பக்கம்:அநுக்கிரகா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

67

ஒருமுறை மனித ரத்தத்தை ருசிப்பார்த்த புலிபோல் மேடைப் புகழை ருசி பார்த்த அநுக்கிரகாவும் ஆகியிருந்தாள். அவளால் இப்போது அதை விடமுடியவில்லை.

“வணக்கங்க அம்மா! எத்தினி நேரமானாலும் நீங்க பேசறதைக் கேட்கத்தான் காத்திக்கிட்டிருக்கோம்” என்று கைகூப்பும் இளைய முதிய பெண்களும், பயபக்தியோடு அவளை வரவேற்கும் கட்சி ஊழியர்களும் அவளை அவற்றிலிருந்து மீளாமல் அழுந்திப் போகும்படி செய்திருந்தனர்.

நெல்லுப்பேட்டை மைதானத்தில் அவள் உண்ணாவிரதம் இருந்த தினத்தன்று மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும் சில வயதான பெண்மணிகள் அவளுக்கு திருஷ்டி கழித்துச் சுற்றிப் போட்டனர்.


10

முதலில் புரியாமல் இருந்த, பிடிக்காமல் இருந்த பல விஷயங்களைப் போகப் - போக அநுக்கிரகா புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். விரும்பவும் பிரியப்படவும் கற்றுக் கொண்டாள். ஒரு நாள் பொன்னுரங்கமும் மற்றோர் ம.மு.க. ஊழியரும் வந்து ஒரு திருமணத்துக்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுக்க வேண்டும் என்று அநுக்கிரகாவிடம் கேட்டார்கள். அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. தனக்கே திருமண வயது தான். ஒன்றிரண்டு அதிகம் கூட ஆகியிருக்கலாம், திருமணமாகாத தான்போய் இன்னொரு திருமணத்திற்கு எப்படித் தலைமை தாங்கி என்ன பேசுவது, எதைப் பேசுவது என்று கூசித் தயங்கினாள், பயமாகக் கூட இருந்தது. அவளைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய்ப் பொன்னுரங்கம் சொன்னான்:

"கட்சித் தொண்டரு. ஆசையோட தேடி வந்து நீங்கதான் தலைமை வகிக்கணும்னு கேட்கிறாரு. மாட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/69&oldid=1423022" இலிருந்து மீள்விக்கப்பட்டது