பக்கம்:அநுக்கிரகா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

69

"அதான் இல்லே. சும்மா மணமக்களை ஜாடையா நாலு வார்த்தை வாழ்த்திட்டு, நம்ம அரசியல் எதிரிங்களைச் சாட வேண்டியது தான். தண்ணிப் பஞ்சம் முதல் அரிசிப் பிரச்சினை வரை எதை வேணும்னாலும் பேசுங்க.."

"கல்யாண வீட்டிலே கூடவா?"

"கல்யாண வீடோ, இரங்கல் கூட்டமோ, எதிலேயும் கிடைக்கிற வாய்ப்பை விட்டுடக் கூடாது."

குறிப்பிட்ட தினத்தன்று ராகுகாலத்தில் கல்யாணம் நடப்பது போல நேரம் குறித்திருந்தது. அநுக்கிரகா முன்னாலேயே கல்யாண மண்டபத்துக்குப் போய் விட்டாள். மணமேடைக்குப் பின்னால் போய் அந்தக் குடும்பத் தலைவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று போனவள் அங்கே அம்மி மிதித்து அருந்ததி பார்த்துச் பசு வேளையில் திருமணம் நடந்து கொண்டி ருந்தது கண்டு வியப்படைந்தாள், அவளுக்கும் அது பிடித்திருந்தது.

"அடடே! வாங்கம்மா. கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதெல்லாம் டயத்தோட நல்ல வேளையிலே முடிஞ்சிடணும். அப்பாலே கல்யாணப் பெண்ணையும், புள்ளையையும் மேடைக்கு அனுப்பிடறோம்," என்றார்கள் அந்தக் குடும்பத்துப் பெண்கள்.

எல்லா இடங்களிலுமே பதறாமல் நிதானமாகத் தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து கொள்ளும் சாமர்த்தியம் இந்நாட்டின் படிக்காத பெண்களுக்குக்கூட இருப்பதை அவள் கண்டாள்.

"இதுபாட்டுக்கு ஒரு தமாஷுக்கு நடக்குதுங்க. அசல் திருமண நிகழ்ச்சி இனிமே மேடையிலே அம்மா தலைமை-

அநு.——5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/71&oldid=1257566" இலிருந்து மீள்விக்கப்பட்டது