பக்கம்:அநுக்கிரகா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

81

விட்டு வேட்பு மனுவை வாபஸ்பெறத் தயாராயிருந்தார்கள், அப்படித் தூது சொல்லியும் அனுப்பினார்கள், பேரமும் பேசினார்கள்.

ஆனால் இதிலும் முத்தையாவுக்குப் பல அந்தரங்கமான சந்தேகங்கள் இருந்தன. தன் மகள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் பேரம் பேசிப் பணம் பறிக்க வசதியாயிருக்கும் என்று கனிவண்ணனே அவ்வளவு பேரையும் டம்மி வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம். அல்லது பரம இரகசியமாகப் பொன்னுரங்கமே கூட அதைச் செய்திருக்கலாம், வசதியுள்ள குடும்பத்திலிருந்து ஒருத்தர் அரசியலிலோ தேர்தலிலோ குதித்து விட்டால் எப்படிப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள் என்பதை இப்போது அவர் அநுபவபூர்வமாகவே புரிந்து கொண் டிருந்தார். முள்ளில் விழுந்து விட்ட மேல் வேட்டியை முள்ளும் குத்தாமல் வேட்டியும் கிழியாமல் எப்படியாவது திரும்ப எடுத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது முத்தையா இருந்தார். செலவில் அவர் ஒன்றும் கஞ்சன் இல்லை. தாராளமான செலவாளி, தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ ஊர்களில் தர்ம சத்திரங்கள், கோவில்களில் அறக்கட்டளைகள் என்று அந்த ஆவாரம் பட்டு சமஸ்தானத்தின் பேரில் நடந்து வந்தன. வள்ளல் தன்மை ஆவாரம்பட்டு ஹவுஸின் தனித்தன்மை என் றாலும் எவனாவது தன்னை ஏய்த்துப் பணம் பறிப்பதை மட்டும் அவர் விரும்பமாட்டார்.

இந்த நாற்பத்திரண்டு. வேட்பாளர்களின் விஷயத்திலும் ஏமாற்றிப் பணம் பறிக்கிற முயற்சியையே அவர் கண்டிருந்தார். கடைசியாக மகளின் வெற்றிக்காக அவரும் விட்டுக்கொடுத்துச் செலவழிக்க வேண்டியதாயிற்று. பொன்னுரங்கம் வந்து வாதாடினான்:

"வீணா ஓட்டுச் சிதறிப் போய்க் காரியம் கெட்டுப் போயிடக் கூடாதுங்க. கனிவண்ணனோட ஸ்ட்ரெயிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/83&oldid=1259158" இலிருந்து மீள்விக்கப்பட்டது