பக்கம்:அநுக்கிரகா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85

.அது தவிரக் கனிவண்ணன் 'சீ சீ இந்தப்பழம் புளிக்கும்' என்ற பாணியில் கட்சி டிக்கெட் தனக்கு இவ்லை என்று ஆனபின் கட்சியிலிருந்து விலகிச் சுயேச்சையாகப் போட்டியிட்டுக் கட்சியையும், கட்சி வேட்பாளராகிய அநுக்கிரகாவையும் தாக்கியது பலருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு டிக்கெட் கொடுத்தவரை நல்ல கட்சி, வேறொருத்திக்கு டிக்கெட் கொடுத்ததும் மோசமான கட்சி ஆகிவிட்டது என்ற அணுகுமுறை மக்களுக்குக் கனிவண்ணன் மேல் வெறுப்பை அதிகமாக்கியிருந்தது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, எங்கும் பிரசாரம் தூள் பறந்தது. வன்முறைகள் அதிகமாயின.

ஆவாரம்பட்டு முத்தையா பங்களா சத்திரம், சாவடி மாதிரி ஆகி விட்டது. போஸ்டர்கள், பசை, வராந்தாவிலும் வாசற்பகுதியிலும் தோட்டத்திலும் தாறுமாறாகக் கூட்டம், தினம் மூன்று வேளையும் நூறு இருநூறு பேருக்குச் சாப்பாடு என்று தடபுடல் பட்டது. முத்தையா பொறுமையே உருவாக இருந்தார். சுவரிலோ வாஷ் பேஸினிலோ ஒரு சின்ன அழுக்கைப் பார்த்தால் கூட ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிற அவர் வீடு முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், பசை நாற்றம், கஞ்சிவாடை லித்தோ சுவரொட்டிகளின் அச்சு வாடை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்,

தேர்தல் செலவுகள் கற்பனை செய்ததையும் மீறி இருந்தன. இரண்டு மூன்று பெரிய ஃபிக்ஸட் டெபாஸிட் தொகைகளை எடுத்துக் காலி செய்தும் போதவில்லை. . பொன்னுரங்கம் ஏதாவதொரு செலவைக் காட்டித் தினசரி பணம் கறந்து கொண்டேயிருந்தான்.

"கனிவண்ணன் பத்தாயிரம் வோட்டு வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வுறான், பத்தயம் வேணாக் கட்டிக்கலாம்" என்றான் பொன்னுரங்கம். தளரத் தளர முத்தையாவை இப்படி உற்சாகப்படுத்துவது அவன் வழக்கமாகி இருந்தது. அவரும் உடனே புது உற்சாகத்தோடு அவன்

அநு.—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/87&oldid=1259166" இலிருந்து மீள்விக்கப்பட்டது