பக்கம்:அந்தமான் கைதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

 லீலா :வேண்டாம் வேண்டாம். அவருக்கு இந்தச் சந்தேகம் மட்டுமல்ல. அவர் சந்தேகங்கள் எல்லாம் தானாகவே ஒரு நாள் நிவர்த்தியாகும். அப்போது அவர் உணர்ந்தால் போதும்.

ஜம்பு : இல்லை, இல்லை, லீலா இனி உன் அண்ணன் நடராஜன் ரெங்கோனில் இருக்கிறாரென்று நினைக்காதே. இதோ இதோ இருக்கிறேன். இனி எனக்கு உன் இன்ப வாழ்வைக் கண்டு ஆனந்திப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மை யாவும் பாலுவுக்கு உரைப்பேன். அவனிடமும் மன்னிப்பைப் பெறுவேன். அவன் சம்மதத்தையும் பெறுவேன். திவான் பகதூரே சம்மதித்து உங்கள் மறுமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்வேன். அதுதான் நான் உங்களுக்குச் செய்த தீமைகளுக் கெல்லாம், பிராயச்சித்தமாகும். போ, நீ போ, நான் வருகிறேன்.

(ஓடுகிறான்)



காட்சி 32.


இடம் : பாலு வீடு, தனி அறை.

காலம்: மாலை.

பாத்திரங்கள்: பாலு, நடராஜன், ஜம்பு.
(பாலசுந்தரம் ஆத்திரத்துடன் லீலாவின் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு)

பாலு: அடி சண்டாளி! துரோகி! விபசாரி! இன்னுமா உன் படம் இங்கு இருக்க வேண்டும்? மோசக்காரி! (படத்தைக் கீழே போட்டு மிதிக்கிறான்) பணத்திற்காக ஒரு கிழவனைக் கட்டிக் கொண்டாய் காம நோயைத் தீர்க்க இப்போது ஒரு வாலிபனை அதிலும் நெடுநாளாய் வேப்பங்காய் என்று வெறுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/124&oldid=1073465" இலிருந்து மீள்விக்கப்பட்டது