பக்கம்:அந்தமான் கைதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

உத்தமி. அவள் உன்மீது கொண்டது உண்மையான காதல், பரிசுத்தமான காதல், ஒப்பற்ற காதல்...

பாலு : என் லீலா உத்தமியா?

ஜம்பு : ஆம். என் வார்த்தையை நம்பு; அவளைக் கை விடாதே; காப்பாற்று! உங்கள் மறுமணத்திற்கு நானே ஏற்பாடு செய்கிறேன். பாவியாகிய என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு. இந்தப் பழிக்கெல்லாம் நானே காரணம்.

பாலு: லீலா... லீலா... ஐயோ... நடராஜன் அவளைக் கொன்றுவிடுவதாக..... லீலா...... லீலா......

(அலறிக்கொண்டே ஓடுகிறான்)



காட்சி 33.


இடம்: திவான் பகதூர் படுக்கை அறை.

காலம்: இரவு

(நடராஜன் சாளரத்தின் வழியே மேல்மாடியில் குதிக்கிறான். தூரத்திலிருந்தே இதைக் கவனித்த பாலுவும் அதே வழியில் பின் தொடருகிறான். மேலே படுக்கை அறையில் மங்கிய தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. பொன்னம்பலம் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறார், லீலா கீழே தரையில் படுத்திருக்கிறாள். நடராஜன் திவான் பகதூர் மீது பாய்ந்து அவர் நெஞ்சில் பிச்சுவாவைச் செலுத்துகிறான். பொன்னம்பலத்தின் ‘ஹா! ஐயோ’...... ஏன்ற கோரக் குரல் எங்கும் எதிரொலிக்கின்றது. வேறொரு ஆள் மேன்மாடியில் குதிக்கும் சப்தம் கேட்ட நடராஜன், இன்னது செய்வதென்றே புரியாமல் பிச்சுவாவைக் கீழே போட்டுவிட்டு மற்றொரு புறம் தாவிக் குதித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/130&oldid=1073467" இலிருந்து மீள்விக்கப்பட்டது