பக்கம்:அந்தமான் கைதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

 ஆள் 1: ஏன் சார், ஜம்புவைப் பார்த்தீங்களா? யாரு கூடவும் பேசுறதில்லே, என்னமோ ஒரு மாதிரி ஆளே மாறிட்டானே.

ஆள் 2 : கேசைக்கூட அவன்தான் தீவிரமாய் நடத்துறான்.

ஆள் 3 : உம் என்ன நடத்தி என்ன? தூக்குத் தண்டனை நிச்சயம்.

ஆள் 2 : சே, நினைச்சாக் கண்ராவியா இருக்கு.

ஆள் 4 : எல்லாம் அடுத்த விசாரணையிலே தெரியும்.

ஆள் 2 : கொலை பண்றது சர்க்கார் சட்டப்படி தப்புதான். ஆனா, வாழ்க்கையைக் கொலை செய்யிற இப்பேர்ப்பட்டவர்களை சர்க்காரே கொலை செய்திடனும். தர்ம ஞாயம் பார்த்தாத் தப்பேயில்லே.

ஆள் 1 : சரி சரி, பேச்சு ரொம்பதூரம் போகுது. பகல்லே பக்கம் பார்த்துப் பேசுங்க, பெரிய எடத்து விவகாரம் நமக்கெதுக்கு? உம், வாங்க.

(போகிறார்கள்)



காட்சி 35.


இடம்: ஷண்முகநாத புரத்திலிருந்து

காலம் : மாலை

70-மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் ஒரு பொதுத் தோட்டம்.

[ஆண்களும் பெண்களுமாக அநேகர் உலாவுகிறார்கள். ஒரு புறம் தனியாய் இருவர் அமர்ந்து அன்றைய தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். திவான் பகதூரைக் கொலைசெய்து விட்டு ஷண்முகநாதபுரத்தை விட்டு ஓடிய நடராஜன் உருமாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/133&oldid=1073469" இலிருந்து மீள்விக்கப்பட்டது