பக்கம்:அந்தமான் கைதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். வல்லமை மிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் நியாயாதிபதியாய் அமர்ந்து நான் பாலுவைக் குற்றவாளியெனத் தீர்மானித்துத் தூக்குத் தண்டனையும் அளித்து விட்டேன். தண்டனைக் காலத்தை இன்னும் சில நாள் ஒத்திவைக்க ஏற்பாடு செய்கிறேன். பாலுவின் சார்பில் வழக்கை மேல்கோர்ட்க்கு அப்பீல் செய்தால் அநேகமாக வழக்கு பாலுவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப் படலாமென நினைக்கிறேன். இந்த வழக்கு சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் நான் எடுத்துக்கொள்ள முடியாதிருப்பதற்காக வருந்துகிறேன்.



காட்சி 37.


இடம் : அந்தமான் தீவு.

காலம் : இரவு.

பாத்திரங்கள் : சின்னக் கைதி, பெரிய கைதி.
[ஆரம்பக் காட்சியின் தொடர்ச்சி. மறுபடியும் அந்தமான் தீவில் கைதிகளின் சம்பாஷணை]

சின்னக் கைதி :பிறகு வழக்கு அப்பீல் செய்யப்பட்டு லீலாவையும், பாலுவையும் பிரித்துவிட வேண்டுமென்பதற்காக, திவான் பகதூரிடம் வேலைக்கமர்ந்து திவான்பகதூருக்குத், தூபம்போட்டுக் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பித்து எங்கள் வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வந்து, என்னை ரெங்கோனுக்குக் கடத்தி, என் தாயை மயக்கி, பாலுவுக்கும் லீலாவின் மேல் வெறுப்புண்டாகச் செய்து திவான்பகதூருக்குக் கல்யாணம் முடித்து, முடிவில் லீலாவைத் தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/140&oldid=1073471" இலிருந்து மீள்விக்கப்பட்டது