பக்கம்:அந்தித் தாமரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


கிணற்றுக்குள்ளிருந்து கூப்பிடுவது போல ஒரு அழைப்புக் குரல் வந்தது. ஒடினர் ஆதிமூலம். செம் பவளம் கூப்பிட்டாள். அவள் அவரது ஏக புதல்வி. தாயின் மரணத்துக்குக்பின் அவளுக்கு அவர்தான்

தாயின் பொறுப்புக்கும் ஒர் உருவாக விளங்கினர்.

செம்பவளம்தான் ஆதிமூலத்துக்கு உயிர், உயிர்ப்பு, ஏன், அவள்தான் அவருக்கு உலகம்!

அழகுத் தேவதை வைத்த அழகுப் போட்டியில் முதற் பரிசை அடைந்த வாலேக் குமரி செம்பவளம். பருவத்தின் பரிபூரண கடாட்சத்துக்கு ஒப்பில்லாத எடுத்துக் காட்டு அந்தப் பெண்.

‘அப்பா! அப்பா!’

ஆதிமூலத்தின் பெற்ற மனம் பதை பதைத்தது. தன்னே மறந்த கிலேயில் அவள் பிதற்றிக் கொண்டிருக் தாள். நாடி பிடித்துப் பார்த்தார் அவர். ஜூர வேகம் துளியும் குறையவில்லை. கெருப்பை வைத்துக் கட்டினுற் போல அவள் உடம்பு கொதித்தது. உடலெங்கும் காஷ்மீர் கம்பளங்கள் போர்த்தப்பட்டிருந்தன. இருந் தும் அவளைக் குளிரின் வேகம் துளக்கித் தூக்கிப் போட்டது.

மருந்துத் துளும் சூரண மும் தேன் சீசாவும் கஷாயம் தயாரிக்கப்பட்டிருந்த பாத்திரமுமாகச் சின்ன காட்டு ஆஸ்பத்திரியே அப்பொழுது அங்கிருந்தது. மூன்று காளாக இரவும் பகலுமாக விடாமல் அடித்த காய்ச்சலின் வேகம் கிஞ்சித்தும் கம்மிப் படவில்லை, செம்பவளத்துக்கு. ஆதி மூலத்துக்கு அவள் வியாதி மட்டுப்பட மறுத்தது. அது அவருக்கு மாளாத மலைப் பையும் மீளாத வேதனையையும் தந்ததில் வியப்பில்லே! காட்டு வைத்தியர் ஆதிமூலத்தின் நாடிச் சோதனைக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/101&oldid=1273105" இலிருந்து மீள்விக்கப்பட்டது