பக்கம்:அந்தித் தாமரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


‘மத்தியானம் போன பெண்; பொழுது அணைந்து விட்டதே இன்னும் வீட்டுக்கு வர ஞாபகம் இருக் காதோ’ என்ற குற்றச்சாட்டை மனசில் கெளிய விட்டு ஆசையுடன் மகளின் வரவுக்காக வாசலுக்கும் வெளிக்குமாகக் கல்யாணி கடந்து கொண்டிருந்தாள். ஆனந்தம் கொழிக்க கின்ற அக்த வேளையில்தான் அந்த அதிர்ச்சி அவளே மோதிற்று. கை கொடிப்பொழுதுதான் என்றாலும் அதற்குத்தான் எவ்வளவு சக்தி அவள் முன் உலகம் ஆலவட்டம் சுற்றியது.

w o

கைப்பிடிப்பில் கிடக்தது அந்தப் புத்தகம். மறுபடி யும் பிரிந்து கிடந்த முதல் ஏட்டில் கண்கள் இழைக்தன. கீர்த்திரையிட்டது கண்ணிர். அவள் வாசித்தாள்: அன் புள்ள கல்யாணிக்கு, அன்பளிப்பு-காகராஜன்’ என்று ஒடியது வாசகம், தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது தாகூரின் அந்த நூல். அவள் புத்தக இதழ்களே நுனிவிரலால் கோதிவிட்டாள். ஏதோ ஒன்று தரையில் விழுந்தது. எடுத்தாள்; பிரித்தாள். அது ஒரு

கடிதம். வாசிக்கலானுள் கல்யாணி:

‘அன்புள்ள நளினு,

நீ ஊருக்குப் போனதும் என்னை மறந்து

விடாமலிருக்க வேண்டுமல்லவா? அதற்காகத் தான் இத்துடன் என் போட்டோவையும் இணைத்துள்ளேன். மறந்து விடாமல் எனக்கு லெட்டர் போடு. உன்னைக் காண விரைவில் திருச்சிக்கு வருகிறேன்.

அன்புள்ள,

சேகரன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/87&oldid=1273094" இலிருந்து மீள்விக்கப்பட்டது