பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேஷ் திடுக்கிட்டார்.

"உங்களை எனக்குப் பிடிக்கல்லேங்க, மகேஷ்! ஆகச்சே. நீங்க என்னை மறந்திடுங்க, மகேஷ் ஸாரே!" என்று தீர்ப்பு வழங்கினான் மணிப்பயல் பாபு!...

பாபுதான் விதியோ?

விதிதான் பாவோ?

"ஐயையோ, பாபுவே!" வீரிட்டு அலறினார் மகேஷ்.

பாபு இப்போது அன்னை ரஞ்சனியின் அன்பான மடியில் வந்து விழுந்தான். அவலுடைய நிர்மலமான அழகு விழிகளினின்றும் கண்ணீர் முத்தங்கள் சிந்திச் சிதறிக் கொண்டிருக்கின்றன. அவனுடைய நாசித் துவாரங்கள் அம்மா ரஞ்சனியின் நாசித் துவாரங்களைப் போன்றே அச்சுக் குலையாமல் அதிக அழகுடனும் மிகுந்த கவர்ச்சியுடனும் புடைத்துப் புடைத்து அடங்குகின்றன.

"பாபு! பாபு!" என்று குரல் தழதழக்க விளித்த ரஞ்சனி, தன் அருமைப் பிள்ளையான்டானுக்கு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள். இடது கன்னத்தின் மருவில் பதிந்த முத்தத்தில், ஒரு சொட்டுக் கண்ணீரும் பதிந்தது!

பாபு கெட்ட கனவு கண்டவன் போலவே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

ரஞ்சனி பதறினாள்.

ரஞ்சித் தவித்தார்.

பாபு, அந்தக் கூடத்தின் கீழ்த்திசைச் சுவரில் பளிச்சிட்ட அந்தச் சித்திரத்தை-மணியம் வரைந்த அந்தச் சித்திரத்தையே வைத்த விழி வாங்காமல் பார்த்தான்; அப்படிப்

135