பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாழி விடுதலை கொடுத்திடு, அப்பனே பாபு! நான் போய்ச் சாப்பாடு தயார் செஞ்சாகணும்; தேடி வந்தவங்களுக்கு பசி அறிஞ்சு சோறு படைக்கலேன்னா, விருந்தோம்பலுக்கே மரியாதை கிடைக்காது.” மார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்து அடங்கிக் கொண்டேயிருக்கிறது.

அதற்குள் :

சின்னதாக ஓர் ஆலோசனையைச் செய்தான் சின்னப் பையன் பாபு, தனக்கும் மகேஷூக்கும், அதே இடது கன்னங்களில் ஒரே அச்சான கறுப்பு மரு-வடு தோன்றியிருப்பதற்கான காரண காரியத்தை அம்மா முன்னே வைத்து விளக்கம் தெரிந்து கொண்டால்தான், தன் பிஞ்க இதயம் அமைதி காட்டுமென்று தோன்றியது. ஆனால், அம்மாவுக்கோ தலைக்குமேல் அலுவல்கள் காத்திருக்கின்றன. பின்னொரு சமயம் கேட்டுத் தெரிந்தால் போயிற்று; இன்னொரு சிதறல். கேட்டான். “ஆமா, பசி அறிஞ்சு சோறு படைக்கணும்னு என்னமோ சொன்னியே, அம்மா? அப்படியானா, மகேஷ் பசி உனக்குத் தெரியுமோ?” என்று சந்தேகம் கேட்டான்.

சுரீர்!......

“மகேஷின் பசி எனக்குத் தெரியும், பாபு!”

“எப்படியாம்?”

“அவர் எனக்குத் தெரிந்தவராக்கும்!”

“எப்படி?”

“எப்படின்னா...? எனக்குத் தெரிஞ்சவர்னா, தெரிஞ்சவர் தான். அவ்வளவுதான்!”

பாபு குழம்புகிறான்!-அம்மா குழப்புகிறார்களே?---"அது போகட்டும்; மிஸ்டர் மகேஷ் ஸாருக்குச் சொந்த ஊர் எது, அம்மா?” என்பதாக மறு கேள்வியை முடுக்கி விட்டான்.

ஆ—11

165