பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பாபுவின் பேரிலே நான் வச்சிருக்கிற துல்லிதமான் அன்பும் அயனான பாசமும் உன்னைக்காட்டிலும் மயிரிழயும் குறைஞ்சது கிடையாது!” என்று சொல்லாமல் சொல்வதைப் போன்று, அங்கே பாபுவைப் பெற்ற அப்பாவும் அப்போது பிரசன்னமானார்.

இப்போது

பாபுவுக்குத் திக்குமுக்காடிப் போய்விட்டது. தாய்க்கும் திகப்பனுக்கும் ஊடாக, ஊடும்பாவுமாகச் சேய் அகப்பட்டுக் கொண்டால், நிலைமை இவ்வாறுதான் அமையுமென்பதற்கு யதார்த்தமான உதாரணமாகத் திகழ்ந்தான் பொடியன்.

என்ன?

பொடியனா பாபு:

பாபுவா பொடியன்?..

பாபுவைத் ‘தெய்வமே, தெய்வமே!’ என்று போட்டி போட்டுக்கொண்டு அப்பாவும் அம்மாவும் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறார்கள்.

பாபுவோ, தனக்குப் பரசுராமர் அவதாரம்தான் இஷ்டம் என்கிறமாதிரி பேசிவிட்டான்.

இந்நிலையில்---

மீளவும் அன்பின் போட்டி ஆரம்பமாகிவிட்டது.

அன்பு மீளமுடியாமல் தவிக்கத் துவங்குகிறது.

“இங்கே வாயேன், பாபு:”

இது அப்பா.

‘ஊம், ஜல்தி!’

தூண்டுதலுக்குப் பேர்: ரஞ்சனி.

177