பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சனி இப்போது அழகாக, வெகு அழகாகவே கடு நீரையும் சிந்துகிறாள்: “'என்னோட அன்புக் கடவுளேத் தனிமையிலே தவிக்கச் செஞ்சிட்டு, தான் இனிமே அப்படியெல்லாம் செஞ்சு வைக்கமாட்டேனுங்க, அத்தான். நான் போய்வரட்டுங்களா? தலைக்குமேலே வே& ரொம்பக் கிடக்குதுங்க, அத்தான்!” இடதுகை மோதிரத்திலும் ஈரம் சொட்டுகிறது.

மெளனம் சம்மதம் தந்தது.

“அத்தான் அத்தான்! பரசுராமர் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

‘உனக்குத் தெரியுமே? நம்ம கூட மதியத்திலே சொன்னனே ?

‘உங்க வாயாலே கேட்கணும்னு ஆசையாஇருக்குதுங்க, அத்தான்!”

எங்கோ இடித்த இடி இங்கே தலையிலே விழுந்துவிட்ட மரண வேதனையில், நாடித் துடிப்பு நின்றுவிட்டமாதிரி உணர்ந்தார் பாங்கர்: “ஜமதக்னி முனிவரோட சம்சாரம் ரேனுகாதேவி; அவள் வழக்கப்படி மண் பிடிச்சுப் பானே செஞ்சு'தண்ணீ கொண்டார ஆற்றங்கரைக்குப் போனப்ப, வானத்திலே யாரோ கார்த்த வீர்ய அர்ச்சுனன் என்கிற கந்தர்வன் ஒருத்தனைப் பார்த்த மாத்திரத்திலே, மனசு மோகத்தாலே தடுமாறிப் போயிட்டதாலே, பானை செஞ்சு தண்ணீயைக் கொண்டுபோக முடியாமல் போயிடுச்சு: கற்புநிலை தவறின மனைவியை முனிவரி மன்னிக்கத் தயாராக இல்லை. ஆகச்சே, அவர் தம்மோட கடைசிமகனை பரசுராமரைக் கூப்பிட்டார். அவனைப்பெற்ற தாயை அவனோட கோடரியினலே வெட்டிச் சாய்க்கும்படி ஆணையிட்டார். பரசுராமர் தந்தையின் உத்தரவை நிறை வேற்றிட்டான்:- சலனத்தின் உணர்ச்சிகளைக் கட்டுப் அடுத்திக்கொண்டு கதையை முடித்துவிட்டு, வெகு எச்சரிக்-

191