பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கையோடு முகத்தை நிமர்த்திப் பார்த்தபோது அருகை ரஞ்சனி அதற்குள் அங்கிருந்து போய்விட்டது தெரிந்தது. மனச்சாட்சி விம்ம, மனம் விம்மியது: மனம் விம்ம, மனக் கண்களும் விம்முகின்றன.

பசி வந்திடப் பற்றும் பறந்துவிடுமாமே?

'ஒமேகா' பூஞ்சிட்டுக்கு கடமைப்பசிதவிர,வேறு எந்தப் பசியும் வராது. அது, இரவு மணி ஒன்பது என்றுகூவி முடித்ததும். விருந்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

வாக்குத் தவறமாட்டாள் நந்தினி விலாசத்தின் ஜீவன் ரஞ்சினி; உயிரான-உயர்வான அத்தானோடு, கூடவே அமர்ந்தாள்.

ரதி, மகேஷ் ஜோடியை இனி யாராலும் பிரித்துவிட முடியாது.

எதிரும்புதிருமான ஆசனங்களில் நந்தினியும் பாபுவும்.

பாபுவுக்குப் பக்கத்து நாற்காலியில் அவன் தோழன். அசோகச்சக்கரவர்த்தி, பங்களாவுக்குப் புதிது!

செவகி வெறும் பொம்மை.

மற்றப்படி, அவரவர்கள் வேண்டியதை வேண்டிக: மட்டும் எடுத்துப் போட்டுச் சாப்பிடவேண்டும்.

இங்கே திருவாளர் ரஞ்சித்தான் விதி:

முட்டை ஆம்லெட், தந்துரி ரோஸ்ட், விரால் மீன். குழம்பு, செம்மீன் இல்லாமலா? புஹாரி நல்ல மனிதர்

தொலேபேசி விளித்தது.

விரைந்தார் ரஞ்சித். கவியரசோடு அன்பில்பின்னிப் பிணந்து உரையாடுவவதென்றால், அவருக்குச் சாப்பாடு கூட மறந்து போய்விடுவது வழக்கம். ஆனாலும், இப்போது

192