பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
அந்தி நிலாச் சதுரங்கம்

5: பொங்கி வரும் பெருநிலவு!

அன்பின் வழியது உயிர்நிலை!

அதோ, மிஸ்டர் மகேஷ்!...

உயிரின் நிலைத்த-நிலைபெற்ற அன்புடனும், அந்த அன்பில் ரசாயனமாற்றம் பெற்ற பாசத்துடனும், தன்னைத் தானே நினைத்துப் பார்த்தவராகவும், தன்னில்தானே இயங்கியும் இயக்கப்பபடும், அழுந்தியும் அழுத்தப்பட்டும் விதிச்சுழலிலே அகப்பட்டு அவதிப்பட்டவராகவும், ஒரு கணம் அப்படியே நின்று விட்டார் மகேஷ்! வேர்வை மடைமாறவும் மடைமாற்றவும் வழியின்றி. வாய்ப்பின்றி, வசதியுமின்றிக் கன்னங்களில் வழிய, வேர்வையில் இடது கன்னத்து மரு அல்லது வடு அலங்கோலமான அவலட்சணத்தோடு ‘விதி’யாகச் சிரிக்க, அச்சிரிப்பை மனத்தால் படமாக்கிப் பார்த்த தருணத்தில், வேர்வையோடு சுடுநீரும்