பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுச் சேரலாயிற்று நெஞ்சக் கூண்டில் கசிந்து உருகிய கண்ணீர் மணிகள் இரண்டிலும் ரஞ்சனியும் பாபுவும் திசை மாறியும் இடம் மாறியும் சுழல ஆல வட்டம் சுழல. அந்தச் சுழற்சியில் இப்போது மகேஷும், கூடவே சேர்ந்து சுழன்றார், சுழல வேண்டியவர் ஆனார்.

காலம் ஒரு செப்பிடு வித்தைக்காரன்!

கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கின்றார் மகேஷ் பா...பு...!-பாபு!” குறுகுறுத்த உள்ளத்தில் ஏக்கம் பின்னல் கயிறாக இறுகிப் பிணைக்க, ஏமாற்றத்தின் பிசிறுகளில், உள் மூச்சு வெளிவாங்கிக் குமிழ்களைப் பறிக்க, மீண்டும் மீண்டும் நீர்ச்சுழலிலும் சூறைக்காற்றிலும் சிக்கிக் கொண்ட உணர்வுகனள் அவரை அலைபாயச் செய்தன; அலைக்கழிக்கவும் செய்திருக்கலாம்.

‘நந்தினி விலாசம் பங்களாவின் 'ஒமேஹா' குருவி ஒரு முறை கூவியது. அப்போது மணி ஒன்றா இல்லே, ஒன்றரையா?

ஆமாம்; அதுவேதான் மாஸ்டர் பாபுவின் அந்தரங்கத் தனி அறை: .

கதவு. பாதி முடியும் பாதி மூடாமலும் இருக்கிறது.

மகேஷ் கால்கடுக்க நின்றார்.

“பாபுவை எப்படியும், எப்பாடு பட்டாகிலும் இப்போது சந்தித்துப் பேசிவிடவேணும் பாபுவை என்னைப் பரிபூரண மாகப் புரிஞ்சுக்கிடச் செய்வதற்கு, இதைக் காட்டிலும் இனியொரு அருமையான சமயசந்தர்ப்பம் வாய்க்கும்னு நம்பமுடியாது. என் ரதிக்கும் எனக்கும் இந்தத் தை முடிகிறதுக்குள்ளே முடிய வேண்டிய கல்யாணத்துக்கு முந்தியே, பாபு பிரச்னையும் குழப்பமில்லாமல் நல்லபடியாகவும், நல்லதனமாகவும் முடிஞ்சிட்டா, என்னைப் போலே

87