பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

இளவரசி வாழ்க



வெயில் இறங்கு முகத்தில் இருந்தது.

பொழுதுபோக்கு மாளிகையில் எத்தனையோ வகைகளிலே அழகும் அமைதியும் கொடிகட்டி விளையாடின. இருந்தும், வேந்தருக்கு எல்லாமே வேம்பாகக் கசந்தன. அந்தப்புரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் காற்றில் மிதந்துவந்ததைக் கேட்டதும் மேலும் விரக்தி பெற்றார். அமைச்சர் தலைவரை நோக்கினார்: “எனக்கென்று இனி இவ்வுலகில் என்ன இருக்கிறது?” என்று நாத் தழுதழுக்கச் சொன்னார். பட்டுத் துகிலில் சுடு நீர்த்திவலைகள் தெறித்து விழுந்தன.

பசுங்கிளி ஒன்று தூரத்திலிருந்து கத்தியது.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் வாரிசு இல்லையா? அப்பால் உங்கள் ..."என்று தலைமை அமைச்சர் முடிக்குமுன்னே, அங்கே தோன்றினான் இளவரசி கன்யாகுமரி! – “தம்பி இருக்கிறான்; நான் இருக்கிறேன்!... உங்கள் குடிஜனங்கள் இருக்கிறார் கள்! இல்லையா அப்பா! மன்னர் எல்லாம் கடந்தவராக இருக்க வேண்டாமா? நான் சொல்வது தவறா அப்பா?”என்று நயமாக அழுத்திச் சொன்னாள் கன்யா குமாரி.

விலைமதிக்க வொண்ணாத இருபெருஞ்செல்வங்களும் நாட்டுமக்களும் அப்போது அவருக்கு ஒன்று சேர்ந்து ஆறுதலாகத் தோன்றினர்.

அருமைத் திருமகளின் அழகிய தத்துவப் பேச்சுகள், தந்தையின் உள்ளுணர்வைத் தூண்டின போலும்!

மெல்லிய இளங்கீற்று, வேந்தரின் உதடுகளில் இழைந்தது. “ஆமாம் என் நாட்டின் கவுரவத்தை முதலில் பாதுகாக்க வேண்டும்!... பவள நாட்டானைப் பல்லுடையச் செய்தவன் நான். கோமளபுரியைக் குடல் தெறிக்க ஓடச் செய்தவன் நான் என்பதை