பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

101



இந்த வேழ நாட்டான் அறியச் செய்ய வேண்டும். நேற்று இவன் அப்பன் கப்பம் கட்டினான். இன்று அவன் பிள்ளை மறுக்கிறான் திறை செலுத்த இளவட்டம் அல்லவா?” சீற்றம் செம்மை காட்டிற்று.

அப்போது, கன்யாகுமரி ‘கலகல’ வென்று நகை புரிந்தாள். தவிர்க்க முடியாத ஏளனம் நகைப்பில் இருந்தது. அதைக் கேட்டதும், மன்னர் பூபேந்திர பூபதிக்கு உள்ளத்தை என்னவோ பண்ணியது. “கன்யா ஏன் இப்படி நகைக்கிறாய் நீ?” என்று கேட்டார்.

“அப்பா!...”

“சொல்... உன் நகைப்பு என்னைப் பற்றிப் படர்ந்ததாகத் தோன்றவில்லை... என் நாட்டைப் பற்றியதாக இருக்க வேண்டு மென்று ஊகம் செய்கிறேன்!” என்று நிறுத்தினார்.

“அப்படியா? உங்கள் நாட்டினைப் பற்றி உங்களுக்கு இருக்கும் கவலை, எனக்கும் என் நாட்டைப் பற்றி இருக்கும். இல்லையா, அரசே?”

“ம்!”

முதலமைச்சர் அழகண்ணல் திணறிக் கொண்டிருந்தார்.

“வேழநாட்டான் திறை செலுத்தாததால் உங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டது போன்று சற்றுமுன் பேசினீர்கள். வாஸ்தவம். அதேபோல், உங்கட்குக் கீழ்ப்படிந்து, ஒப்பந்தக் கப்பம் கட்டுவதால், வேழநாட்டு அரசனுக்கு மனம் நோகாதா, தன் கவுரவம் பாழ்பட்டதை எண்ணி?....”

ஆமாம்; பேசியவள் சிருங்காரபுரி நாட்டு இளவரசி கன்யா தான்!