பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


நமக்கும் மேலே!

பிறர் பொருளை எப்பொழுது எடுத்துக்கொண்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவன், கடைசியில் தன் பொருளையும் இழந்து, ஏமாந்து தான் போகிறான். முன்னேற்றத்திற்குப் பதிலாக முடிவில் அவமானமே கிடைக்கிறது.

Ο O O

வல்லமையுள்ள மனம்

வசதியும் வாய்ப்பும் உள்ள சூழ்நிலையில் தேகத்தைக் கெடுக்கின்ற தவறுகள் எனத் தெரிந்து கொண்டு செய்யாமல் தவிர்த்து விடுவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதற்கு மிகவும் வல்லமையுள்ள வலிமையான மனம் வேண்டும்.

Ο O O

மன சாட்சி தெய்வம்

மனிதனுக்குப் பயப்படுபவன் மனிதனல்ல.
மனசாட்சிக்கு பயப்படுபவனே மனிதன்.

Ο O O