பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

 காலம்

எல்லாரும் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்ல விரும்புகிறார்கள். கேட்பது தான் யாரென்று தெரியவில்லை காலம் இப்படி மாறி வருகிறது!

Ο O O

புலம்பல்

பொழுது போதவில்லையே என்று உழைப்பவர்கள்தான் நோயில்லாமல் வாழ்கின்றார்கள். சந்தோஷமாக இருக்கின்றார்கள். பொழுது போகவில்லையே என்பவர்கள் வாழ்வு புலம்பலில் ஆரம்பித்து, கலங்கலில் வளர்ந்து, அலங்கோலமாய் முடிகிறது. வித்தியாசம் புரிகிறதல்லவா!

Ο O O

குருட்டு ஈ

ஒரு காரியத்தை ஆரம்பித்து செய்து கொண்டிருக்கும் பொழுது, விவரம் தெரியாமல் குறுக்கே விழுந்து கெடுத்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் நிறையவே சந்தித்திருக்கக் கூடும். சங்கடப்பட்டிருக்கவும் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே நேர்ந்திருக்கலாம். இருட்டு நேரத்தில் கூட, மேலே மொய்க்கின்ற குருட்டு ஈ போன்றவர்கள் அவர்கள். விரட்டினால் போகாத அந்த ஈ அடிபட்டுத்தான் விழும். அதுபோலத்தான் மனித, இனத்தில் குருட்டு ஈக்கள் நிறைய இருக்கின்றன. இதனால் தான் கொலைகளும் சமுதாயத்தில் விழுகின்றனவோ!

Ο O O