பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


வாழ்க்கை என்ற கடிகாரம்

வாழ்க்கை என்ற கடிகாரத்தில் நாட்கள் என்பது தான் நிமிட முட்கள். காலம் என்பது மணி காட்டும் முள். ஒருவரின் வாழ்க்கைக் கடிகாரம் அமைக்கும் பொழுதே, இறப்பு என்கிற அலாரத்தை அழகாக ஆண்டவன் செட் பண்ணி வைத்து விடுகிறான். வருகிற அந்த நேரம் பார்த்து கடிகாரம் அலாரம் அடித்து முடித்து வைத்து விடுகிறது. அலாரத்தோடு கடிகாரமும் போய் விடுகிறது!

Ο O O

எரியும் விளக்கு

எரியும் விளக்குக்குத்தான் மதிப்பும் மரியாதையும் உண்டு. வாழ்த்துகின்றவர்களும் வணங்குகின்றவர்களும் உண்டு. எரியாத விளக்கை வெளியே வீசி எறியத்தான் எல்லோரும் முயல்வார்கள். அதுபோல் தான் உடலும். உழைக்கும் உடலுக்குத்தான் மதிப்பு. மரியாதை, வாழ்த்து, வணக்கம் எல்லாமே கிடைக்கும். உழைக்காத உடலை, மற்றவர்கள் வெறுக்கும் முன்னரே, அந்த உடலே பிறர் நகைக்க நோய்ப்பாயில் படுத்துக் கொள்கிறதே! பிறகெப்படி கிடைக்கும் மதிப்பு? பேசிப் பார்க்கும் பொழுது புரியாத இந்த விஷயம், படுத்துக்கிடக்கும் பொழுது தான் புரிகிறது!

Ο O O