பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


ஆளில்லாத பல்லக்கு

ஊருக்கு உபதேசம் செய்யும் பொழுது உற்சாகமாகத் தான் இருக்கிறது. அதைக் கடைபிடிக்கும் பொழுது தான் கஷ்டமாக இருக்கிறது. கஷ்டத்தில் யார் கஷ்டப்படுவார் என்று தான், இப்பொழுது எல்லோரும் உற்சாகமான உபதேசத்தில் இறங்கி விட்டார்கள். இருக்கிற எல்லோருமே பல்லக்கில் ஏறிக்கொண்டு விட்டார்கள். பல்லக்குத் துாக்க ஆளில்லை. பல்லக்கு படுத்துக் கிடக்கிறது. பாவம்!

Ο O O

ஆரோக்கியமான நட்பு

மனிதன் என்பவன் சிறந்த லட்சியங்களுடன் வாழ வேண்டும். அதற்காக இறுதிவரை உழைக்க வேண்டும். பலனைப் பெற்று பெருமிதம் அடைய வேண்டும். இதுதான் வாழ்க்கைத் தத்துவம். இந்த இலட்சியத்தில் ஈடுபடும்பொழுது, நல்ல நண்பர்கள் அறிவுரை கொடுக்கிறார்கள். உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள் புரியாத இரண்டுங் கெட்டான் நண்பர்கள், அவனை அந்தப் பக்கம் போகவிடாமல், காரணமில்லாமல் தடுக்கிறார்கள்,நயவஞ்சக நண்பர்களோ, செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். ஒருவன் முன்னேறவேண்டுமானால் உதவியையும் உற்சாகத்தையும் கொடுக்கிற நண்பர்களையே பெற வேண்டும். அதுதான் ஆரோக்கியமான நட்பாகும்.

Ο O O