பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


எச்சரிக்கையாய்
ஏராள நிமிடங்களை
இறைத்துப் பொறுக்கிய
நிறைவான ஜாக்கெட் !
அதற்கென்று பின்னணி
அலங்கார முன்னணி
இத்தனை ஒப்பனைகள்
சித்திரப் பெண்ணாய்
சாலையில் நடக்கிறாள் !
வைரக் குவியலின்
பேழையாய் நெளிகிறாள் !
எதிரே ஒருத்தி
கீரைகள் சுமந்த
கிழங்கு உடல் காரி !
சொற்ப ருபாய்க்கான
அற்பமான சேலையைச் சுற்றி,
தலை சுமை கனக்க
நெளியும் இடையுடன்
களைத்தே நடக்கிறாள் !
அந்த சேலைக்குள்ளே
அலங்காரி கண் பாய்ச்சல் :
அகோர மேய்ச்சல் !

அ. க, 5