உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 6 அனைத்துலக மனிதனே நேர்க்கி இத்தகைய தொடர்புகூட அற்றுவிடும் நாள் ஒன்றும் வரு கிறது. அன்று இந்த உலகப் பணியை முடித்துவிட்ட ஜீவ ஆன்மா பரமாத்மாவைச் சந்திக்கத் தயாராகி விடுகிறது. ஒவ்வொரு கிலேயிலும் மரணத்துடன் போராடி இறுதியில் மரணம் வெற்றி பெற்றுவிடாத முறையில் வாழ வேண்டுமானுல், இந்த வழியில்தான் உண்மையான வாழ்வு வாழ வேண்டும். - புராதன இந்தியா கண்டறிந்ததும், இந்த நான்கு நிலைகளில் வாழப்படுவதுமான வாழ்க்கைதான், அகில அண்ட கியதியுடன் பொருத்தமுடையதாய், அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும் பேராசைக்கு இடம் தராததாய், பரமாத்மாவிடம் இறுதியில் கொண்டு செலுத்துவதாய் அமைந்திருக்கிறது. . . . நாட்டுப்பற்று, வள்ளல் தன்மை என்பன போன்ற பெரிய பெயர்களுடன் கட்டிய வேறு எந்த வழிகளாக இருப்பினும் அந்த வழிகள், இறுதி முடிவுக்கு கம்மை அழைத்துச் செல்லமாட்டா. அதற்குப் பதிலாக நம்முடைய பல்வேறு பணிகளினிடையே திடீ ரென்று நட்டாற்றில் விட்டுவிடும். ' அடுத்து என்ன? அடுத்து என்ன?’ என்ற விளுதான் கம் காதுகளில் ரீங்காரம் செய்யும். இங்கிலையில் ஓர் ஐயம் தோன்றுதல் இயல்பே. இந்த வழியில் ஒரு நாட்டு மக்கள் அனைவரையும் சீராக்க முடியுமா என்பதே அந்த ஐயம். விளக்குத் திரியின் நுனி மட்டுமே எரிந்தாற்கட விளக்கு முழுவதும் எரிவதாகவே கூறுகிருேம் என்பதுதான் அந்த ஐயத்துக்குரிய விடையாகும். வாழ்க்கையின் மிகச் சிறந்த குறிக் கோள்கள் சமுதாயத்தின் மிகச் சிறந்த ஒரு சிலரிடமே ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன. எங்த நாட்டிலும், ஒரு சிலராவது குறிக்கோளை அடைவதில் வெற்றி பெற்ருல், அந்த காட்டு மக்கள் முழுவதும் இலாபமடைந்ததாகவே கருதவேண்டும். இந்தியாவில் உள்ள தலைவர்கள் பேருண்மை, பெருகலம் என்பவற்றை மிக உயர்வாகக் கொண்டு, அவர்கள் வாழ்க்கையை அவற்றிற்கேற்றபடி மாற்றி யமைத்துக் கொண்டு கடக்கும் நாள் வருமேயானுல், அன்றுதான் அனோருடைய முயற்சிக்கும், அவர்கள் கல்வழி கட்டிச் சக்தியை யும் அளிக்கமுடியும். மிகப் பழைய இந்தியாவில் பெரிய அறிஞர்கள் பலர், இத்தகைய கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை நடத்திப் பரம்பொருளுடன் தொடர்புகொண்டு வாழ்ந்த காலம் உண்டு. அவர்களுடைய ஆன்மீக சக்தி, சமயத் துறைகளில் மட்டும் செல்லாமல் காட்