பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 8 இவைகள், சில அம்சங்களில் தம்முள் மாறுபட்டாலும் பழைய சமயக் கருத்துக்களையும், நவீன விஞ்ஞானக் கருத்துக்களேயும் ஒற்றுமைப் படுத்தவே முயன்றன. முதன் முதலில் தோன்றிய வியப்புணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து, கடு கிலேயுடன் அனைத் தையும் காண முற்பட்டகாலத்தில்தான் தாகடர் பிறந்தார். அவர் பிறந்த காலத்தில், புதிய கருத்துக்கள் கொண்டு வந்த இலட்சியம் இன்னும் வலுவாக நிலைபெற்றிருந்துங்கூட, இந்தியாவின் சொந்தக் கருத்துக்களில் மக்கள் அதிகக் கவனம் செலுத்தத் தொடங் கிர்ைகள். இது காலத்தால் மட்டுமல்லாமல், இடத்தாலும் பொருத்த முடையதாய் அமைந்தது. மேனுட்டின் தொடர்பு, இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்படுவதற்கு முன்னரே வங்காளத்தில் விரிவான முறையில் ஏற்பட்டது. வங்காளத்திலும்கடடக் கல்கத்தாவில் தான் அதிகச் சுறுசுறுப்புக் காணப்பட்டது. வாணிகர்கள், போர் புரிபவர்கள், ஆட்சியாளர்கள், சமயப் பிரசாரகர்கள் ஆகியவர் களுடன், அனைவர்க்கும் மேலாக, பிறப்பிலேயே பிறருக்கு அறிவு கொளுத்தும் சக்தியைப் பெற்றி ஆசிரியர்களும் இந்த நகரத்தை யும், அதன் சுற்றுப்புறத்தையம் நோக்கியே வந்து சேர்ந்தனர். அவர்கள் இங்கிலாந்திலிருந்து மட்டுமல்லாமல், போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனேய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்தனர். அக் காலத்தில் எளிதில் செல்ல முடியாத நீண்ட தூரத்தில் உள்ள ரஷ்யாவிலிருந்தும் கூட, ஒருவர் கல்கத்தாவுக்கு வந்திருந்ததாகக் கல்கத்தா நாடக அரங்கில் ஒரு பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. தாகூரைப் பொறுத்தவரை கிழக்கும் மேற்கும் ஒன்று கூடியது ஓர் இலட்சியமாகவும் நேரே நிகழ்ந்த நிகழ்ச்சியாகவும் அமைந்தது. தாகர் ஒரு மாமேதையாக மலர்வதற்கு அவருடைய குடும்பச் சூழ்கிலேயும் உதவியது-கிழக்கு வங்காளத்திலிருந்து வந்த அந்தக் குடும்பம் மொகலாயர் காலத்தில் செல்வமும் வளமும் பெற்றுத் திகழ்ந்தது. ஆட்சியாளரோடு அவர்கள் ஒத்துழைத்தது பண்பாட் டையும், செல்வத்தையும் நக்திதாயினும் லகுதனிகளிறு டை: வெறுப்பையும் வளர்த்தது. அந்தப் பழைய காலத்தைப்பற்றி அதிகம் தெரியாவிடினும், கிழக்கு இந்தியக் கம்பெனி இங்கு கிலேபெற்ற காலத்தில், கல்கத்தாவில் செல்வமும் செல்வாக்கும் கிறைந்த குடும்பங்களில் தாகூர் குடும்பமும் ஒன்ருகத் திகழ்ந்தது. தாகூரின் பாட்டனர் துவ்ாரகாங்ாத் தாகூர், தம் செல்வ வாழ்க்கை காரண