பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அனத்துலக மனிதனை நோக்கி வைத்துக் காப்பாற்றக் கூடிய தகுதியைப் பெற்ரு லொழிய, உரி: மைகளே மட்டும் பெறத் தகுதி இல்லை. இதை எவ்வளவு விரைவாக" அறிந்து கொள்ளுகிருேமோ, அவ்வளவுக்கும் நன்மையுண்டு. எனவே, உயர்ந்த இடத்தையும், கெளரவத்தையும் அடைவதற்குத் தனிப்பட்ட பாதை எதனையும் முஸ்லீம் கண்டிருந்தால் தடையில் லாமல் அவர் அந்த வழியில் முன்னேறிச் செல்லட்டும். நம்மைப் பொறுத்த வரையில், பெருந்தன்மையோடு, அவர் நல்ல முறையில் முடிவு இடத்தை அடையட்டும் என்று பிரார்த்தனை செய்வோமாக. புறத் தோற்றத்திலுள்ள இந்தத் தாரதம்மியத்தைப் பற்றி அள வுக்கு மிஞ்சின அழுத்தம் கொடுத்துப் பேச நான் விரும்பவில்ஆல. இதனை மாற்றியமைப்பதும் கடினமான காரியமன்று. உண்மையான மனிதத் தனித் தன்மையைத்தான் நான் மனத்துள் கொண்டு பேசுகிறேன். அந்தத் தனித் தன்மையை அழிப்பது தன்னத் தானே அழித்துக்கொள்வதாகும். ஒரு தனிப்பட்ட பல்கலைக் கழகத்தை அமைப்பதில் முஸ்லீம் களுக்கு ஏதாவது போட்டி மனப்பான்மை இருக்குமேயானல், அந்த மனப்பான்மை உண்மையானதாகவோ, கிலேயானதாகவோ இரா தென்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொருவருடைய தனித் தன்மையையும் உணர்ந்துகொள்வதே இதில் காணப்படும் முடிவான உண்மையாகும். அவருடைய சொந்த இயல்பை வைத் துக்கொண்டு அதில் உயர்நிலையை அடைவதுதான் ஒரு முஸ்லிமின் உண்மை விருப்பமாக இருக்க முடியும். - வேறுபட்ட தனித்தன்மை ஒன்று இவ்வாறு தோன்றும் பொழுது, தொடக்கத்தில் ஒருவகையான அச்சம் ஏற்படுகிறது. பகைமையை வளர்க்கின்ற இத் தனித் தன்மைகள் மேலும் இடங் கொடுக்கப்பட்டு வளர நேர்ந்தால் அதன் பயணுக மக்களுக்குள் ஒற்றுமைக் குறைவே. ஏற்படுமென்று தோன்றுகிறது. - - இவ்வாறு அஞ்சுவதற்குரிய காலம் ஒன்றிருந்தது. அக்கா லத்தில் ஒவ்வோர் இனமும், ஜாதியும் தன்னுடைய எல்லேக் குள்ளேயே கின்று, தன்னுடைய தனித் தன்மையை அளவுக்கு மீறி வளர்த்துக்கொண்டு, மனித சமுதாயத்திற்கே தீங்கு செய்யக் கூடிய ஒரு நிலையை யடைய முற்பட்டதுண்டு. அத்தகைய ஒரு வளர்ச்சி இந்த நாளில் இயலாத காரியம். மனித சமுதாயத்தின் நடுவே நாம் ஒவ்வொருவரும் வழி கண்டு