பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முன்னுரை ஆளுல் அதே நேரத்தில் வேறு எந்தப் பகுதியிலிருந்து வந்ததா யினும் சிறந்த கொள்கைகளே வரவேற்றுத் தம்முடைய பண்பாட்டில் கலந்து கொள்ள எப்பொழுதும் தயாராக இருந்தார். பழைய கால இந்தியாவிலிருந்தும், மத்திய கால இந்தியாவிலிருந்தும் வருகின்ற மரபுகளால் உருவாக்கப் பெற்று, அதே நேரத்தில் கவ. இந்தியாவின் முன்ஞ்ேடியாகவும் இருந்த அவருடைய குடும்பம், பழமையை எவ்விதத்திலும் விட்டுக் கொடாமல், புது யுகத்தின் சோதனைகளே யும் ஏற்றுக் கொண்டது. அவரிடம் காணப்பட்ட இந்தியப் பண் பாட்டையும், மேனுட்டின் புதிய கருத்துக்களே ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த மனப்பான்மையையும் அவருடைய குடும்ப அடிப்படையே உதவிற்று. பழைய ஐதீகத்தையும் புதிய சோதனையையும் கலக்கும் அவருடைய வியத்தகு ஆற்றலின் இரகசியம் இங்கே தான் காணக் கிடக்கிறது. தாகூரைப் பொது மக்களுடன் ஐக்கியப்படுத்தும் மற் ருென்றும் இருக்கிறது. அவருடைய தந்தையார் தம் சொத்துக் களைப் பராமரிக்கும் பொறுப்பை, தாகடரின் இளமைப் பருவத் திலேயே, அவருக்கு வழங்கி விட்டார். தம்முடைய பிள்ளைகளுள் மிக இளையவரும், கனவு காணும் கவிஞர் என்ற பெயரை ஏற் கனவே எடுத்துவிட்டவருமான ரவீந்தரரிடம் தம் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பை மகரிஷி ஒப்படைத்ததைக் கண்டு பலரும் வியப்படைந்தனர். குடும்பச் சொத்தைப் பராமரிக்கும் பொறுப்பை மகரிஷி தம்மிடம் ஒப்படைத்தது மிகவும் விவேகமான செயல் என்று அனைவரும் கருதும்படி கவிஞர் செய்தார். இதில் குறிப் பிடத்தக்க விஷயம் என்னவென்ருல், கிழக்கு வங்காளத்தில் கிராமப் பகுதிகளிலேயே தாகடர் பல ஆண்டுகள் வசிக்க நேரிட்டது. பத்மா நதியில் மணற் கரைகளிடைய்ே படகோட்டு வதிலேயே அவர் பெரும் பொழுதைச் செலவு செய்தார். வங்காளக் கிராமம், கிராம மக்கள் ஆகியவர்களிடம் இதன் மூலம் அவர் நெருங்கிய தொடர்புகொள்ள முடிந்தது. இந்தப் பகுதிகளில் அவர் கண்ட வாழ்க்கைமுறை அப் பிராந்தியங்களின் மிகப் பழைய SA A AS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A iSJST SSSJ SSS JSSS JSSS S0S SSSJ Si STT K SSAAAAAAS AAAS SAAAAAS AAAAA AAAAS AAAAA SAAAAA AAAA AAAA S AAAAA AAAA SAAAAA هم به نام " ه . ، ۹۰۰ م.: س، ماشینی، نی: ، ته نامه : வளர்ந்த நகரப் பண்பாட்டிற்கு மிகமுற்பட்டே அக் ராமியப் பண்பு மக்கள் மனத்தில் வேரூன்றி வளர்ந்திருந்தது. நவீன காலத்தில் கல்வி பெற்ற வகுப்பார்களில் பெரும்பாலார் அறிய முடியாத ஓர் உலகத்தில் தாகூர் நுழைய முடிந்தது. அம் மக்களின் - ஒருமித்த மன வாழ்வின் ஆழத்தில் தாகூர் கால்கொள்ள முடிந்தது.