பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு ... 303 இதைத்தான் உண்மையில் விடுதலையின் தோற்றம் என்று கூற வேண்டுமே தவிரப் பிறவற்றை யல்ல. நாடு தன்னைத் தானே அறிந்து கொண்ட கிலே இதுதான். பிற நாட்டார் இந்தியாவை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் ஒன்று மில்லை. இந்த அன்பு முற்றிலும் உடன்பாட்டு முறையானது. எதிர்மறை இயல்புடன் இந்த உடன்பாட்டு முறை எவ்வித விவாதத திலும் இறங்குவதில்லை. எவ்விதமான விவாதத்திற்கும் அங்குத் தேவையுமில்லை. அன்பை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் ஏற்பட்ட இந்த ஒப்பற்ற விழிப்பில் தோன்றிய இசையின் ஒரு பகுதி, கடல் கடந்து இருந்த என் காதுக்கும் எட்டியது". இந்தியாவின் இருதயத்தில் மறைந்து கிடக்கும் சக்தி எல்லாம் தூண்டப்பெற்று முற்றிலும் விடுதலை யடைந்து தொழிற்படுவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருப்பதை கினைத்தபொழுது எவ்வளவு இன்பமாக இருந்தது? இதுதான் உண்மையான விடுதலே என்று கான் நம்பினேன். எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்ட வேண்டும் என்ற தம் கொள்கையை புத்தர் கூறியபொழுது அந்த இலட்சி யத்தின் கிளர்ச்சி வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தொட்டதுடன் ஆக்கக் கலைகளையும் வளப்படுத்திற்று. அந்தப் பழைய காலத்தில் கடட, அங்கும் இங்குமாகச் செய்யப்பட்ட அரசியல் ஒற்றுமை முயற்சியில் அடிக்கடி விரிசல் காணப்பட்டது. இந்தக் கிளர்ச் சியின் வலுக் கராணமாக, அது கடல் கடந்தும் சென்று அந்த நாட்டில் உள்ளவர்களும் தம்முள்ளே அடங்கிக் கிடக்கும் செல் - வத்தை உணருமாறு செய்தது. எந்த ஒரு வெற்றி வீரனும் அல்லது மாபெரும் வாணிகனும் இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க முடியாது. அவர்கள் கண்ட வெற்றியில் ஒற்றுமை யின்மை, அவமானம், வருத்தம் ஆகியவை மட்டுமே இருக்தன. உயிரை அதனுடைய ஆணி வேரில் தொடும் :ொழுதுதான் அன்பு குறிக்கோளே விடுதலைக் குறிக்கோளே அல் கிறது. ஆகு *:: * ** அடைய \ விரும்பும் பேராசை, கசக்கிப் பிழியும் முறையைக் து. பிரிவினைக்க மற்பட்ட போரட்டத்தில் இதனை கன்கு அறிய முடிந்தது. அந்தப் போரட்டத்தில் அக மனத்தில் தோன்றும் அன்பு காரணமாக அல்லாமல், பேராசையின் காரன மாகப் புறத்தே தோன்றும் கட்டாயத்திற்குட்பட்டுப் பலர் தியாகம் செய்தனர். கிலேயாத வெற்றிகளாக இருப்பினுங்கூட அவற்றை :விரைவில் பெற்றுவிட வேண்டுமென்று விரும்புகிறது பேராசை,