பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 0 . அனைத்துலக மனிதனை நோக்கி அரசியலில் ஒளித்திருக்கிற பேராசையும், ஏமாற்றமும் இன்னும் தளையைப் பிணித்தே வைத்திருக்கின்றன. அந்தத் தளயும் மனத்தின் உள்ளேயேதான் இருக்கிறது. பிற இடங்களிற் காணப்படுவது போல இந்த நாட்டிலும், அறிவு, விஞ்ஞான சிந்தன, ஆகியவற்றில் மனம் விரிவது மூலக்தான் சுய ராஜ்யத்தைப் பெற முடியுமே தவிர அர்த்தமற்ற சடங்குகளால் அல்ல. ஒரு சில நேரத்துக்கு சர்க்காவைச் சுழற்றுவதன்மூலம் இத்தகைய சுயராஜ்யத்தை அடைகது விடலாம் என்று கடறுவதில் பொருளே இல்லை. மனிதர்கள் வார்த்தைகளைத் தேவ வாக்குக் களாக எடுத்துக் கொள்வதாகுல் ஏற்கனவே நம்மிடம் உள்ள ஆயிரத் தொரு மூட கம்பிக்கைகளுடன் இதுவும் ஒன்ருகச் சேர்ந்து விடும். இப்படிப்பட்ட தெய்வ வாக்குகள்தாம் நம்மைத் தொழிற் படச் செய்யும் என்று கண்டால் வேறு வழியே இல்லாமல் இரவும் பகலுமாக ஆயிரக் கணக்கான தெய்வ வாக்குகளைத் தயாரிக்க வேண்டி நேரிடும். ஏனைய குரல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விடும். பகுத்தறிவின் இடத்தை, விடாப்பிடி என்பது பிடித்துக் கொண்டால், சுதந்திரத்தின் இடத்தை எதேச்சாதிகாரத்துக்குத் தந்துவிட நேரிடும். இது புதிய தன்று. இந்தியாவைப் பொறுத்த மட்டில் உலக காரியங்களில் கூட தெய்வங்கள், கட்டார்த்த விளக் கங்கள், மற்றும் தெய்வீக செயல்கள் தலையிடுவதை நிரம்ப அனு பவித்துள்ளோம். ஆகவேதான் வீழ்ந்துவிட்ட பகுத்தறிவை மறு படியும் ஆசனத்தில் அமர்த்த ஆசைப்படுகிறேன். கிர்வாணமாக, அவமானத்தால் நிறைந்து நிற்கும் தாயின்' எதிரே யந்திரத்தில் உற்பத்தி செய்யப்பெற்ற துணி மலையளவிற்குப் போட்டுக் கொளுத்தப்படுகிறது. வெறும் மூட நம்பிக்கையால் செய்யப்பட்டால் ஒழிய இவ்வாறு பொருளே வீணடிப்பதற்கு அவசியம் இருப்பதாகவே தெரியவில்லை. பிரிட்டனில் நெய்யப்பெற்ற துணியைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது பொருளியல் வாதிகள் முடிபு செய்ய வேண்டிய விஷயம். அதுபற்றி விவாதிக்கும் பொழுது பொருளாதார பாஷையைத்தான் உபயோகிக்கவேண்டும். விஞ்ஞான ரீதியில் மக்கள் சிந்திக்க மறுத்தால் அத்தகைய வருந்தத் தகுந்த மன நிலையை மாற்றியமைக்கவே நம்முடைய முதற் போராட் டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு சிந்திக்க முடியாமல் இருப்பதே முதற் குற்றம். அதிலிருந்தே ஏனைய குற்றங்கள் தோன்றுகின்றன. விதேசித் துணி தூய்மை யற்றது என்றும் அது அழிப்பதற்கே தகுதியுடையதென்றும் கூறும் கூற்று இந்த முதற் குற்றத்துக்குத்