பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கவிஞன் நிறுவிய பள்ளிக்கூடம் என்ன நோக்கிக் கேட்கப்பெறும் கேள்விகளிலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன், என்னைப்போல் அவசரப்பட்டு ஒரு கவிஞன். பள்ளிக்கடிடம் ੋ। கிறுவி விட்டால் அவன் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய கிலேபிலுள்ளான் என்பதே அது. ஓயாது நூற்றுக் கொண்டே இருக்கும் பட்டுப் புழுவும், காற்றில் மிதந்து கொண்டே இருக்கும் பட்டுப் பூச்சியும் வாழ்வின் முரண் பட்ட இரண்டு கிலைகளைக் காட்டி நிற்கின்றன. இயற்கையின் கணக்கெழுதும் இலாகாவில், பட்டுப் புழு செய்யும் வேலைக்கு ஏற்ப, ஏதோ ஒரு முறையில் வரவு வைக்கப்படும் என்று தெரிகிறது. ஆல்ை, பட்டுப் பூச்சி பொறுப்பற்றுத் திரிகிறது. அதனிடம் இருக்கக் கூடிய பொருளுக்குக் கனமோ, பயனே இல்லேபோல் தோன்றுகிறது. ஆதலால்தான் கடனமாடும் இரண்டு சிறகுகளில் அது தன் உடம்பைத் தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறது. ஒருவேளை நிறங் களின் தேவதை, கணக்கெழுதும் வேலை எதுவும் இல்லாமை விலுைம், காலத்தைப் பாழாக்கும் கலையை நன்கு கற்றிருப்ப தாலும், இந்தப் பட்டுப் பூச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறது போலும் ! - - கவிஞனே அந்தப் பைத்தியக்காரப் பட்டுப் பூச்சிக்கு ஒப்பிடலாம். ஆக்கல் தொழிலின் பல்வேறு இன்பமான நிறங்களே அவனும் கவிதையில் மொழி பெயர்க்க முயல்கிருன். அப்படியானுல் அவன் ஏன் கடமை என்னும் விலங்கில் சிக்க வேண்டும்? ஒருவன் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பை அது சம்பாதிக்கும் இலாபத்திலிருந்தே கணக்கிடும் மக்களிடம் அவன் ஏன் கணக்குச் சொல்ல வேண்டும்? - குளிர் காலத்தில் நல்ல வெய்யில் காயும் ஒருநாள் நீண்டு வளர்ந்த சால் மரங்களின் அமைதியான கிளைகளின் கதகதப்பான நிழலில் சில மாளுக்கர்களே ஒன்று கூட்டியபொழுது, சொற்கள் மூலம் அல்லாத ஒரு கவிதையை, இந்தக் கவிஞன் புனேய ஆரம் பித்தான் என்பதே அவனுடைய விடை. உளப் பகுப்புப் (Psycho analysis) பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், அறிஞர் சிலர், அமுக்கப்பட்ட விடுதலை புணர்ச்சி என்ற மறைந்துள்ள மன கிலேயிலும், தன்னை அறியும் அறிவு ஏமாற்றப்பட்ட மன நிலையிலுக் தான் கவிதையின் இரகஸ்யமான ஊற்று இருக்கிறதென்று கடறு