பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 36.3 வேகத்தைக் குறைக்க முயல்வதே எங்கள் நோக்கமாகும். நாங் கள் செய்யும் வேலையைப் பற்றிய விவரங்களை அறிந்தால் அவை உங்கட்கு மிக அற்பமாகக் காணப்படும். ஆனல் சிறிதாகத் தோன்றுகின்ற காரணத்தால் ஒன்றைக் கண்டு காங்கள் அஞ்சு வதில்லை ; எனென்ருல் நாங்கள் வாழ்வில் நம்பிக்கை கொண் டுள்ளோம். எங்கள் அகத்தினுள் இருக்கும் உண்யையின் முளேயை அது பிரதிபலிக்குமானல், எல்லாவிதத் தடைகளேயும் வெல்வதுடன் காலம் இடம் ஆகிய அனைத்தையும் வென்று விடும். வறுமைப் பிரச்னையைக் காட்டிலும், மகிழ்ச்சி இன்மை பற்றிய பிரச்னைதான் மிகப் பெரிய பிரச்னை என்பதை நாங்கள் அறிவோம். உற்பத்தி, பொருள் சேகரம் என்ற இரண்டின் மறு பெயர்தான் செல்வம் என்பது. எனவே, கருணை யின்றி மக்கள் அதனைப் பயன் படுத்தல் கூடும். பூமியில் உள்ள உயிர்களே நசுக்கிக் கடிட அது வாழ முடியும். ஆனல் மகிழ்ச்சி, தான் வைத்திருக்கும் பொருள் பட்டியலில் செல்வத்தோடு போட்டியிட முடியாவிட்டாலும், முடி வானதாய், ஆக்கம் உடையதாய், தன்னுள்ளேயே ஒருவகைச் செல்வத்தைப் பெற்றதாய் விளங்குகிறது. வண்டல் நிறைந்துள்ள கிராம வாழ்க்கை என்னும் கிலத்தில் மகிழ்ச்சி என்ற நீரைப் பாய்ச்சுவதே எங்கள் குறிக்கோளாகும். இதனைச் செய்வதற்கு அறிஞர்கள், கவிஞர்கள், இசை வல்லுகர்கள், கலைஞர்கள், ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும். இல்வாறு செய்யாவிட்டால் அவர்களும் மற்றுவர்களைப் போல, மக்களினுடைய உயிரை உண்டு, பதிலுக்கு ஒன்றுந் தாராத ஒட்டுண்ணிகளாய் ஆகி விடுபவர்கள். வறுமைப் பிரச்னையைப் பற்றி ஆராய்கின்ற நாம் ஒவ்வொரு வரும், உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது என்பது பற்றியே சிந்திக்கிருேம். அவ்வாறு செய்வதால் மானிடமும், பொருள்களும் அதிகமாகக் களப்படைந்து விடுகின்றன என்பதை நாம் மறந்து விடுகிருேம். பலருடைய செலவில் ஒரு சிலருக்கு மட்டும் அது மிகு லாபம் பெறும் வழியைச் செய்கிறது. உணவுதான் ஊட்டத்தைத் தருமே தவிர, பணம் தாரது. வாழ்வு நிரம்பி இருப்பதால்தான், ஒருவர் இன்பம் பெற முடியுமே தவிரப் பணப்பை கிரம்பி இருப்பதால் மகிழ்ச்சியைப் பெற முடியாது. உலகாயதக் செல்வத்தை மட்டும் பெருக்கிக் கொண்டு செல்வதால், உடைய வர்கட்கும் இல்லாதவர்கட்கும் உள்ள வேற்றுமை பெருகிக் கொண்டே போகிறது. அதன் பயனுக, சமுதாய முறையில் பெரிய 24