பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அனைத்துலக மனிதனை நோக்கி காங்கிரஸிலும் இதே நிலைமைதான். தேசீய காங்கிர்ஸின் இயல்பு களில், உண்மையான தேசீயம் என்பது, எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருந்த அதன் உபசரிக்கும் பகுதியில்தான் காணப்பட்டது. மற்றப்படி அதனுடைய அலுவல்கள் ஆண்டு விழாவில் மூன்றுநாள் கூட்டத்துடன் முடிந்து, ஆண்டு முழுவதும் அதில் வேறு உயிரிருப்பதாகவே காணப்படவில்லை. மிகத் தீவிரமான அலுவலின் இடையே கூட இந்தியர்கள் மனித இதயம் படைத்தவர்களாகவே உள்ளனர் என்பது நன்கு விளங்கும். நாடு முழுவதிலும் உறவினர், அங்கியர் என்பாரிடை யேயும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இடையேயும் உள்ள நெருங்கிய உறவுக்கு இதுவேகாரணம். ஆகையினுல்தான், கிராமப் பள்ளிக் கூடத்தையும் விருந்தினர் விடுதியையும் காப்பதற்கும், கோயில், குளங்களைக் காப்பதற்கும், அநாதையான குருடர், நோயாளிகள் ஆகியவர்களைக் காப்பதற்கும் வெளியார் கவலை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையே இருந்ததில்லை. எந்த இடங்களில் மிக அதிகமான நன்மைகள் கிடைக்கின்ற னவோ, அந்த இடங்களில் காட்டினுடைய கவனம் முழுவதையும் செலுத்துதல் இயல்பு. நாட்டின் செல்வம் பல வழிகளில் வெளி நாட்டுக்குக் கொண்டுபோகப்படுகிற தென்று நாம் வருந்துகிருேம். ஆளுல், நாட்டின் ஆன்மாவும் வேறுவழியில் திருப்பப்பட்டு, ஒவ் வொரு கலந்தரும் தொடர்பும் வெளி நாட்டாட்சியாளர் கையில் சிக்கி, நமக்கு ஒன்றுமே இல்லை என்னும் கிலே ஏற்பட்டால், இங்கில நாட்டின் செல்வம் பறிபோவதைவிடக் குறைந்த வருத்தத்தையா உண்டாக்கும்? IV முதலில் ஏற்படும் ஆர்வங் காரணமாகப் பலர் பல மலர்களே மலர வைக்கின்றனர். ஆல்ை இறுதியில் இவற்றில் பல மலர்கள் பலனளிக்கக்கூடிய பழம் பழுப்பதில்லை. இவ்வாறு நிகழ்வதற்கு முக்கியமான காரணம், கெளரவம் பற்றிய கவலையும், தான் உறுப் பிலாகுக உள்ள குழுவின் தேவைகள் பற்றி அறியும் ஆறறலும் இல்லாமைதான். பொறுப்புணர்ச்சி எளிதாக நம் தோளிலிருந்து நழுவி மறைந்தே விடுகிறது. வெளியிலிருந்து வரும் சக்திகள், கம்மை வெல்வதற்காக ஒற்றுமையுடனும் வேகத்துடனும் தொழிற்படுவதால், நம்முடைய சமுதாயம் இந்த முறையிலேயே நிலைக்க முடியாது. அச் சக்திகள்