பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அனைத்துலக மனிதனை நோக்கி இந்தியாவின் பிற பகுதிகளும் தொடரும். ஒவ்வொரு இந்திய மாகாணமும் தன்னுள் ஓர் ஒற்றுமையைக் காணக் கட்டுமாயின் பிறகு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்க முடியும். ஒருமுறை நிலைக்க வைத்துவிட்டால் ஒற்றுமையின் ஆட்சி வளர்ந்துகொண்டே செல்லும். ஆனல் ஒற்றுமை என்று கூறும்பொழுது தனிப்பட்ட உறுப்புக்களேக் கும்பலாக ஓர் இடத்தில் கொட்டுவது என்பது பொருளன்று. v நம்மிடம் இயல்பாக அமைந்துள்ள சக்திகளை எல்லாம் ஓரிடத் தில் ஒன்று திரட்டி அவற்றை நன்முறையில் பணியாற்றச் செய்வ தற்கேற்ற ஒரு வழிமுறையையும் .வகுக்க வேண்டியதன் அவ. சியம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறினுல் அது எவ்வளவு முக்கியமான தென்பது நன்கு விளங்கும். செளகரியத்தை முன் னிட்டோ அன்றி வேறு காரணத்தைக்கொண்டோ, அரசாங்கம் வங்காளத்தைத் துண்டாட முனைந்தது"; அவ்வாறு செய்தால் மாகாணம் பெரிதும் வலியிழந்து நிற்கும் என்பதனுல் நாம் அஞ்சு . கிருேம், அதனே மறுத்து வேண்டுமானவரை ஒப்பாரி வைத்தாகி விட்டது. ஆனால், கம் முயற்சியில் தோற்றுவிட்டால் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடுமா ? இந்தப் பிரிவினையினல் ஏற்பட்ட தீமையைப் போக்குவதற்கு ஒரு வழியும் இல்லாமற் போய்விடுமா ? நோய் உண்டாக்கும் கிருமிகள் உடம்பில் நுழையாமல் இருந் தால் மிகவும் நல்லது. ஒருவேளை அவை நுழைந்துவிட்டால், அவற்றை எதிர்த்துப் போராடி, மறுபடியும் உடலே வலுப்படுத்து கின்ற எதிர்ச் சக்தி இல்ல்ாமற் போய்விடுமா? எதிர்த்துப் போராடு கின்ற ஒரு வலிமைபடைத்த அதிகாரத்தை நம் சமுதாயத்தில் நிறுவிவிட்டால், பிறகு எந்த வெளிகாட்டுச் சக்தியும், வங்காளத்தை வலி இழக்கச் செய்யும் வன்மையைப் பெறமுடியாது. அந்த அதி காரம், ஒவ்வொரு காயத்தையும் ஆற்றி, ஒற்றுமையின் தளையை வலுப்படுத்தி, அகமனத்தை விழிப்படையச் செய்யும். இன்று நம்முடைய நாட்டில் நடைபெறும் நற்செயல்களுக்கு வேற்று நாட்டு அரசர் ஒருவர் பட்டங்களே வழங்குகிருர். ஆல்ை, கம் காட்டு மக்களின் அன்பையும் ஆசியையும் பெற்ருல்தான் உண்மையிலேயே புகழடைவோம். நம்முடைய சமுதாயமே வெகு மதிகள் வழங்குமாறு உரிமை யளித்தாலன்றி, அதில்லிருந்து கிடைக் குழ் ஒரு தனிப்பட்ட திருப்தியை இழந்துவிடுவோம். நம்முடைய