பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 கோபுரத்துக்குக் குப்பை மேடா சமதை?” என்று குழைந்தார் அவர். "எம்புட்டுப் பணத்துக்கும் கவுரவத்துக்கும் எமனுயிருக்கிற அந்த மாணிக்கம் பயலுக்கு உறைக்கிற விதத்திலே நல்லாச் சூடு, குடுத்துப்புட்டு நின்னத்தானே நான் வீரமணி! ... மண்டைக் கட்டு ஆறிப்போயிடுச்சுன்னு இருக்கான்! ... ஊம். வாட்டும்?... ೫5ು சரி. என்ன கேட்டீங்க? அம்மான்காரக வந்து சாமி கும் பிடுறதுக்கு அழைக்கலையான்னுதானே கேட்டீங்க?... அவரு எப்பிடிங்க வருவாரு?... ஓங்கின கை இறங்காம களத்துமேட் டுக் கங்காணம் கண்டு முதலைக் கருக்கடையாப் பார்த்துப் பழ கினவரு-இருந்த சொத்துப்பத்தை பர்மாச் சீமையிலே லாவா ரம் பண்ணி அழிச்சுப்புட்டு இப்ப ஆத்தா புண்ணியத்திலே அல் லுச் செல்லு இல்லாம ஊருக்கு மதிப்பா ஊறிக்கிட்டு வருறவரு -அங்காளம்மை ரதத் திருநாளையிலே அத்தனை பெருந் தலை களையும் ஒதுக்கிப்பிட்டு ஆத்த இவரோட முதல் ஆடன எத் துக்கிட்டு வருற பெருமையிலே கண்ணுமண்ணு மட்டுப்படாம. திரிஞ்சலேயிறவரு, என்ன வந்து ரோசத்தை உதித்துப்புட்டுக் கூப்பிடுவாராங்காட்டி?... நீங்க ஒண்ணு!..." என்று எகத் தாளமாகப் பேசின்ை வீரமணி. வேட்டியின் புது ஜரிகை தங்க சின்னச்சாமி அம்பலத்துக்குச் சிரிப்பு வெடித்தது. "பொடி, வச்சு நைத்தியம் பேசுறதிலே ரொம்பத் திரவிசாய் இருக்கிங் களே. கோபதாபம் இருக்கிறது சகஜம்தான். அதுக்காக முக தைப்புக்கு ஒருதரம் வந்து சாப்பாட்டுக்கு அழைச்சவரு, மறு தரமும் வந்து ஒங்களை விடாப்பிடியாய் அழைச்சா, அவர் குடியா முழுகிப்போயிடும்?. இல்லாட்டி எம் பெஞ்சாதிக் னும் சேர்ந்தில்ல என் சம்சாரத்தை ஏசியிருக்குது. எம் அ-5