பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

7

மாடியின் விசாலமான அறையிலும் ஒளி நிறைந்து நின்றது. ஆனால், கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு அதிகமில்லை. குளுமை நிலவிய சூழல் அது. மணம் மிகுந்த இடமும்கூட.

அழகுப் பெண்கள் உருவில் நின்றன. சில விளக்குகள். நீந்தும் வெள்ளி மீன்கள்போல் தொங்கின சில. பறக்கும் அன்னம் போல அமைக்கப்பட்டு மஞ்சத்தின் அருகில் தொங்கிய விளக்கு மட்டும் தங்கத்தால் உருவாகித் தகதகத்தது.

அறையின் நடுவில் ஒரு பீட்த்தில் மலர்ந்த தாமரை வடிவில் ஒரு பொற்பாத்திரம் இருந்தது. பொதிகை மலைச் சந்தனத்தில் பொடி செய்யப்பட்ட தூள் குவிக்கப் பெற்றிருந்தது அதில். அனல் இடப்பட்டிருந்ததால், அதிலிருந்து நறுமணம் புகையாய்க் கிளம்பி அறை முழுவதும் நிலைத்து நின்றது. .

தொங்கிய அன்ன ஊஞ்சலில் ஒயிலாகச் சாய்ந்திருந்தாள் ஒர் அழகி. சுடரொளி வீசும் கூர் விழிகள் இப்போது மூடியும் மூடாமலும் சொக்கி நின்றன. அந்த முகத்தில் அழகை அதிகப் படுத்தும் ஒப்பனை சிரத்தையோடு செய்யப்பட்டிருந்ததாக விளக்கொளி வெளிச்சமிட்டுக் காட்டியது.

பொற்சரிகை இட்ட வெண்துகில் முடி மறைத்தது அவள் உடல் அழகை. எனினும், விம்மி நின்றும் சரிந்து படிந்தும் பெண்மைக்கு வசீகரமும் வனப்பும் தந்த அங்கங்கள் அவளது மேனி வளப்பத்தை, போர்த்த துகிலின் துணையோடு, எடுப்பாகக் காட்டிக் கொண்டுதானிருந்தன.

நீண்டு அலை பாய்ந்து நெளி நெளியாய் புரண்ட கருங்கூந்தலை அவள் அள்ளிச் சொருகி முடிக்கவுமில்லை பாம்புபோல் சடையாக முறுக்கிக் கட்டித் துவளவிடவு