பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அன்னக்கிளி

 மாலையை நீ மறந்துவிட முடியுமா? அது உன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததும் அதை அடைய நீ திட்டம் தீட்டியதும் வெளியுலகம் அறியாதுதான். ஆனால் ஆங்தை அறிவான்...'

'நீ என்னவோ கதை அளக்கிறாய்...' என்று இழுத்தாள் அமுதவல்லி. ஆயினும் அவள் குரலிலே மிடுக்கு இல்லை. பார்வையிலும் ஒளிக்கனலில்லை.

ஆந்தையின் சிரிப்புத்தான் மீண்டும் எடுப்பாக ஒலித்தது. 'ஆந்தையை ஏமாற்ற எண்ணுகிறவர்கள் தலை தூக்க முடியாது. ஆமாம். மன்னனிடம் சில உண்மைகளை நான் சொல்ல நேரிடும் அம்மணி! அரசமாதேவி பெற்றெடுத்த திருமகன் தானாகச் சாகவில்லை; கொலையுண்டான் என்பதையும் தேவியாரே குளிர்ச்சன்னியால் மரணம் எய்தவில்லை; தன்னலக்காரரின் நஞ்சினால்தான் மடிந்தார் என்பதையும் சடையவர்மன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

ஆந்தை பயங்கரமான ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து, வேகமாகத் துள்ளிக் குதித்தான். அமுதவல்லியின் கையிலிருந்து சுழன்று பாய்ந்து வந்த குத்திட்டி தனக்குரிய குறியை இழந்துவிட்டு, சுவரில் மோதித் தரைமீது டக் கென்று விழுந்தது. -

ஆந்தையை இவ்வளவு எளிதில் தீர்த்துக்கட்டிவிட முடியுமா என்று கனைத்தான் அவன்.

அமுதவல்லி தன்மீது பதித்திருந்த பார்வையை அப்பால் ஒட்டியதையும் அதில் புது ஒளி சுடரிட்டதையும் அந்த மங்கிய ஒளியிலேகூட ஆந்தையின் கூரிய கண்கள் கண்டு கொண்டன. அவன் திரும்பிப் பார்த்தான். வாசல்