பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அன்னக்கிளி

 தகத் தகாயப் பொன்னொளியின் கூரிய கதிர்கள் பட்டுத் தெறிக்க, மிடுக்கான குதிரை மீது எடுப்பான சிலையைப்போல வீற்றிருந்து மாலை வேளையில் வீதி வழியே உலா வந்தானே ஒருவன் - வீரத் திருப்பார்வையை வழங்கும் இரண்டு அழகிய விழிகளின் சொந்தக்காரன் - அவன் யாரோ? பலகணியின் பின்னே நின்ற அவளது கண்களை மட்டுமாதொட்டது அவன் விட்டெறிந்த நோக்கு? அவள் உள்ளத்தையே பாடாய்ப் படுத்திவிட்டதே...! அன்னக்கிளி பெருமூச் செறிந்தாள்.

'அவன் ஓர் அரசிளங் குமரனாகத்தான் இருக்க வேண்டும். எவ்வளவு கம்பீரம்! என்ன வீரம்! அவர் குதிரைதான் எப்படி இருந்தது!’ என்றெல்லாம் துதிபாடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அவனை மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கியது. பார்க்க முடியாமலே போய்விடுமோ என அஞ்சியது ஒரு மனம். அந்த ஆண் அழகனை எவ்வளவு நேரம் வேண்டுமாயினும் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற ஆசை நினைப்பு அலையிட்டது. உடனேயே, அவளுக்கு இயல்பான நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. அந்த இருட்டிலும், தனிமையிலும் கூட அவள் முகம் தானகவே குவிந்து தாழ்ந்தது. ஆயினும், உள்ளத்தின் குதூகலத்தை ஒடுக்க முடியவில்லை அவளால்.

கண்களை மூடினாலும், தூங்கியும் தூங்காத நிலையிலே கூட, குதிரைமீது வந்த சிங்கார௹பன் தான் கனவில்வந்து, கிறக்கும் பார்வை தந்தது; காந்தப் புன்னகை பூத்து நின்றான். அன்னக்கிளி அப்படி ஒரு கனவு நிலையில் பறந்து கொண்டிருந்தபோதுதான், வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை எழுந்தது. தனது அன்பனின் குதிரை வரும் குளம்பொலியே அது என்ற பிரமை அவளுக்கு