பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அன்னக்கிளி

 'இதற்கெல்லாம் காரணம் இந்த அமுதவல்லிதான், அவளுக்கு நான் சரியான பாடம் கற்றுக் கொடுப்பேன்’ என்று கருவிக் கொண்டான் அக் கொடியவன்.

வண்டியை இழுத்துச் செல்லும் குதிரைகளின் குளம்பொலி தவிர, வேறு குளம்போசை கனத்துக் கேட்டது. சந்தேகமில்லே. வேறு யாரோ குதிரை மீது வருகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வருகிறார்கள். ஆகவே, அங்கு நிற்பது தவறு என்று கருதி ஆந்தை தோப்பினுள் புகுந்தான்.

அமுதவல்லியின் மாளிகை போன்ற பெரிய இல்லத்தைச் சேர்ந்த தோப்பு விசாலமானது. காடு போல் மரங்களும், செடி கொடிகளும் மண்டி நிற்கும் இடம் அது. பலரக மரங்களும் செறிந்த பகுதியினுள் புகுந்து சென்றால் சவுக்கு மரங்களும், ஓங்கி வளர்ந்த மூங்கில்களும் அடர்ந்து நின்ற பகுதி உண்டு. அதனுள் எத்தனை பேர் பதுங்கியிருந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. யார் எவரைக் கொலை செய்து மூங்கில் புதருக்குள் வீசி எறிந்தாலும் தெரியாது.

எயில் ஊர் ஆந்தை தற்காப்புக்காக அங்கே சென்று கொண்டிருந்த வேளையில், அவனால் பறி கொடுக்கப்பட்ட குதிரை வண்டி தீவிரமாக முன்னேற முடியாமல் திணறியது. வண்டியினுள் விடப்பட்ட அன்னக்கிளி சும்மா கிடப்பாளா என்ன?

அவள் கைகளால் வண்டியின் பக்கங்களைத் தட்டினாள். கால்களால் திம் திம் என்று மிதித்து ஒசைப்படுத்தினாள்.'ஐயோ கொலை! கொல்கிறானே!' என்று அலறினாள்.

இது ஆபத்து என் உணர்ந்த அந்நியன், வண்டி ஒட்டும் பீடத்திலிருந்து உள்ளே திரும்பிப் பார்த்து, 'ஏய்