54
அன்னக்கிளி
என்று மென்குரலில் சொல்லி மெதுவாக அவள் கன்னத்தில் விரலால் தட்டி விட்டு வெளியேறினார்.
நிம்மதியாய் மூச்சு உயிர்க்க அன்னக்கிளி வீடு நோக்கித் திரும்புவதில் ஆர்வம் காட்டினாள்.'ஒரு அபாயத்திலிருந்து இப்போதைக்குத் தப்பி விட்டோம்' என்ற உணர்வு அவள் உள்ளத்தில் தளும்பியது.
'திருமாறன் இப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாதே' என்று அவள் மனம் பேசிற்று. அவர் கெளரவமிக்கவர் நல்லவர் என்றே அவள் எண்ணியிருந்தாள். அவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்கும். ஆயினும் வயதை எடுத்துக்காட்டாத கட்டுடலும் வனப்புத் தோற்றமும் பெற்றிருந்தார். அவரைக் கண்டு மோகிப்பவர்கள் இருக்கலாம்.ஆனால் அன்னக்கிளி அவரை வெறுத்தால்.
மறுபடியும் அவர் முன் போய்த் தனியாக நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டாள் அவள். தனது வாழ்க்கையில் எதிர்பாராத சுழல்கள் சுழியிடத் துவங்கிவிட்டதை அவளால் எண்ணாதிருக்க இயலவில்லை. திருமாறன் அவளிடம் விளையாடத் துணிந்த அதே நாளையில்தான் அவள் குதிரைமீது வந்த சுந்தரகுமாரனைக் காண நேர்ந்தது. அன்று இரவில்தான் எயில் ஊர் ஆந்தையோடு அவள் போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது! அவனிடமிருந்து தப்பி ஓடியபோது அவள் எதிர்பார்த்திராத வகையில் ஒருவன் அவளைத் தூக்கிச் செல்ல முயன்றான். காலம் உதவி புரிந்து குதிரை வீரனைக் கொண்டு வந்து சேர்த்தது...!
திருமலையின் நினைவு அன்னக்கிளியின் உள்ளத்தில் இனிமை கூட்டியது. அவனது வீரத் திருவுருவமும், அழகு