பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அன்னக்கிளி

 'இப்பொழுது ஏன் சிரித்தாய், அன்னம்? என்று கேட்டான் திருமலை.

'நீங்கள் ஏன் சிரித்தீர்களாம்?' என்றாள் அவள்.

'இப்படி நாம் தெருவில் பேசாமல் நின்றுகொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அதை நினைத்துத்தான் சிரித்தேன்’ என்று அவன் கூறினான்.

‘நானும் அதற்காகத்தான் சிரித்தேன். நம் இருவர் மனசும் ஒன்றுபோல் இருக்கிறதே! என்றாள் அன்னக்கிளி.

'எனக்கு நேரம் ஆகிவிட்டது. போனவள் இன்னும் வரவில்லேயே என்று அமுதவல்லிப் பிராட்டியார் இப்பொழுதுகூட எரிச்சலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்' என்று கூறியபடி அவள் நடக்கலானாள். திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே கடந்து சென்றாள் அவள்.

அவள் மறையும்வரை அவள் பக்கமே கண் எறிந்து நின்ற திருமலைக்கொழுந்து, பிறகு குதிரை மீதேறிக் கொண்டு தனது வழியே செல்லலானன்.

அவனைத் தேடிவந்த மருது பாண்டியன் 'நீ எங்கே ஊர் சுற்றப் போய்விட்டாய்? நாம் வந்த பணியை நீ முற்றிலும் மறந்துவிட்டாய் போலும்!’ என்று கடிந்து கொண்டான்.

'நான் ஒன்றும் மறக்கவில்லை' என்றான் திருமலை.

"நினைவில் கொண்டிருந்தால் அல்லவா மறக்க முடியும் என்கிறாயாக்கும்? அதுவும் சரிதான். உன் நினைவுதான் கருவண்டுகள் போன்ற கண்களை உடைய ஒருத்தி மீது