பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

57

 லயித்துக் கிடக்கிறதே' என்று நண்பன் கெண்டை பண்ணினான்.

திருமலை மென்னகையை இதழ்களில் விளையாட விட்டானே தவிர, வேறு பேச்சு எதுவும் பேசவில்லை. அவன் அருகில் வந்து மருது பாண்டியன் மென்குரலில் முண முணத்தான். அவன் சொன்ன செய்தி முக்கியமானது என்பதைத் திருமலையின் பரபரப்பு விளம்பரப்படுத்தியது; இருவரும் ஒத்துப் பேசிக்கொண்டு கிளம்பியது போல, குதிரைகளே முடுக்கினார்கள். பொங்கி எழுந்த புழுதிப் படலம் அவர்களுக்குத் திரையிட்டது.

மருது வந்ததையும், இரண்டு பேரும் வேகமாகச் சென்றதையும் நின்று கவனிக்காதவளாய் அன்னக்கிளி திருமாறன் இல்லம் நோக்கிச் சென்றாள்.

அங்கே 'அவர் இல்லை' என்ற செய்தி கிடைத்தது அவளுக்கு. வேறு விவரம் எதுவும் கிட்டவில்லை. விரைவில் வந்துவிடுவார் என்று கேள்வியுற்றதால், அவர் வருகிறவரை காத்திருப்பதே நல்லது என்று அவள் தீர்மானித்தாள். ஒரே இடத்தில் தங்கியிருக்கப் பிடிக்காமல் அவள் அவ்வீட்டைச் சுற்றி வருவதில் உற்சாகம் கொண்டாள்.

அப்படி அவள் வருகிறபோது குதிரைகளும் வண்டிகளும் நிற்கும் இடத்தை அடைந்துவிட்டாள். 'திருமாறன் குதிரைகள் மீது அதிக ஆசை உடையவர் போலும்! எத்தனை குதிரைகள் வைத்திருக்கிறார் எவ்வளவு அழகான குதிரைகள்! வண்டிகளில்தான் எத்தனை ரகம்!' என்று அவள் மனம் வியப்புற்றது.

வண்டிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்த அவள் பார்வை ஒரு வண்டியின் மீது நிலை பெற்றது. 'இதுதான்