65
அவன் ஏழைகளுக்கு வழங்கின்ை. சட்டைப் பையில் ஒரணுகூட இல்லாமல் இருந்த பழைய காலங்களை அவன் மறக்கவில்லை. இப் பொழுது கைமிறையப் பணம் இருந்ததால், அவன் நேர்த்தியான உடைக%ளயே அணிந்து வந்தான். அவனைச் சுற்றி எந்த நேரமும் நண்பர்கள் தழ்ந்திருந்தனர். எல்லோரும் அவனைக் கனவான் என் றும் வள்ளல் என்றும் வாழ்த்தினர்கள். அத்தகைய வாழ்த்துக்களை அவனும் விரும்பின்ை.
ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்துக்கொண்டும், செலவுகளுக்குத் தக்க வருவா யில்லாமலும் இருந்ததால், அவன் செல்வம் மிக வேகமாகக் கரைந்துகொண்டே வந்தது. ஒரு நாள் அவன் தன் இருப்பை எண்ணிப் பார்த்தான். பத்துக் காசுதான் இருந்தது! அப்பொழுது அவன் பெரிய அறைகளைக் காலி செய்து, ஒதுக்கமான ஒரு சிறு அறைக்குச் சென்றன். அங்கே எல்லா வேலை களையும் அவனே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. பூட்ஸு களைத் துடைப்பதும், அவை கிழிந்தபோது தைப்பதும்கூட அவன் வேலைகளாயின. நண்பர்களில் எவரும் அவனைப் பார்க்கச் செல்ல வில்லை. அவனுடைய அறை மிகவும் உயரமான முகட்டில் இருந்த தால், படிகளில் ஏறமுடியவில்லை என்று அவர்கள் சொல்லிவிட்டனர்.
ஒரு நாள் மாலையில் இருள் பரவி வரும்பொழுது, ஒரு மெழுகு திரி வாங்கிப் பொருத்துவதற்குக்கூட அவனிடம் போதிய சில்லறை யில்லை. அங்கிலையில் தீக்கல் பெட்டியில் ஒரு துண்டு மெழுகு திரி கிடந்தது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன் அந்தத் திரியை எடுத்து, பெட்டியில் ஓர் உருக்குத் துண்டைக் கீச்சித் தீப் பற்ற வைக்க முயன்றன். அனற் பொறிகள் பறந்ததும் பெட்டியின் முடி படிரென்று திறந்துகொண்டது. அந்தக் கணத்திலேயே, தோசைக்கல் போன்ற கண்களையுடைய காய் அவன் முன்பு வந்து கின்றது. அவன் மரத்தடியில் முதல் அறையில் கண்ட காய்தான் அது. எசமான், என்ன உத்தரவு' என்று அது கேட்டது.
அட ஆண்டவனே! இந்தத் தீக்கல் பெட்டி அற்புதமானது தான்! நான் விரும்புவதையெல்லாம் இப்படிப் பெற முடியுமானுல், வேறு என்ன வேண்டும்?...நாயே, கொஞ்சம் பணம் கொண்டுவா! என்று அவன் உத்தரவிட்டான்.
கண்மூடித் திறப்பதற்குள் காய் காசுகள் நிறைந்த ஒரு பையைக் கொணர்ந்து கொடுத்தது.