பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அன்னி பெசண்ட் அம்மையாரின்


இருவருக்கும் மிஸ் மேரியட்டே கல்வி போதித்தார், சிறு குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த வழியிலும், எளிய முறையிலும் கல்வி கற்பிப்பதே சிறந்த வழி என்ற கருத்துடையவர் அவர். அதனால், புதிய முறையிலேயே கல்வியைப் போதித்தார் இருவருக்கும். இதனால் அன்னிக்கு மேரியட் கல்வி புகட்டும் முறை அவளுக்கு எளிமையாகவும்-சுலபமாகவும் இருந்ததால், தொடர்பாக அவரிடம் கல்வி கற்றார்கள் ஆக்குழந்தைகள்.


அன்னி மேரியட்டிடம் சுமார் ஏழாண்டுகள் தங்கிப் படித்தார் விடுமுறைகள் வரும்போதெல்லாம் தனது தாயாரையும், தமையனையும் பார்க்க அன்னி ஹாரோ சென்று விடுவாள். மற்ற நாட்களில் மேரியட்டுடன் தங்கியே கல்வி கற்றாள்! அதற்கேற்றார் போல எந்த வசதிக் குறைவையும் மேரியட் ஏற்படுத்தியதில்லை.


அன்னியையும், மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் செல்வார். இதனால் குழந்தைகள் பார்க்க வேண்டிய காட்சிகளை நேரில் பார்த்துப் பரவசப்படுவார்கள். கல்வியிலே முழுமை பெற முடியும் என்பது மேரியட் கொள்கை.


இக் காலத்துப் பள்ளிகளிலும் இன்றும் மாணவர்கள் எக்ஸ்கர்ஷன் போவதைப் பார்க்கிறோம் இல்லையா அதனைப் போல:


ஜேர்மனிக்கு கேரியட் அழைத்துச் செல்லும் போது அன்னிக்கு வயது பதினான்கு இருக்கக்கூடும். அந்த வயதில் உல்லாசப் பயணம் சென்றால் பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனத்தில் பகமரத்தாணி போல பதியும் அல்லவா? ஜெர்மன் நாட்டில் மூன்று மாதங்கள் தங்கி பல இடங்கனை நால்வரும் பார்த்தார்கள். அந்த பயணத்தால்


குழந்தைகள் பெற்ற பயன்கள் மிக அதிகமாக இருத்தன,